Translate

Thursday, April 9, 2009

முஸ்லிம்கள் அனைவரும் அரபுக்களா!!!?

உலகிலுள்ள முஸ்லிம்களின் ஜனத்தொகை 1.2 பில்லியனாகும். 
இந்த பூமியில் நடமாடக் கூடிய 5 நபர்களில் ஒருவர் முஸ்லிமாக இருக்கின்றார். இவர்கள் அனைவரும் பல்வேறு இனம், நாடு, மொழி, கலாச்சாரத்தைக் கொண்டவர்களாக இந்த பூமிப் பந்தில் பிலிப்பைன் முதல் நைஜீரியா வரை, மேலே உள்ள பல்வேறு வேற்றுமைகளில் தாங்கள் ஏற்றுக் கொண்ட இறைநம்பிக்கையின் அடிப்படையில் முஸ்லிம்களாக ஒருமைப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 

முஸ்லிம்களில் அரபு நாடுகளில் வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் வெறும் 18 சதவீதமானவர்களே. மேலும், உலகின் மிகப் பெரிய முஸ்லிம் சமுதாயம் இந்தோனேசியாவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றது. ஆநெகமான முஸ்லிம்கள் கிழக்குப் பாகிஸ்தானில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். 30 சதவீத முஸ்லிம்கள் இந்தியத் துணைக்கண்டத்திலும், 20 சதவீத முஸ்லிம்கள் சஹாரா பாலைவனத்து ஆப்ரிக்கப் பகுதிகளிலும், 17 சதவீத முஸ்லிம்கள் தென்கிழக்கு ஆசியாவிலும், 18 சதவீதம் அரபுநாடுகளிலும், 10 சதவீதமானோர் சோவியத் ரஷ்யா மற்றும் சீனாவிலும் வசித்துக் கொண்டிருக்கின்றார்கள். துரக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான் ஆகிய அனைத்தும் இணைந்து 10 சதவீத முஸ்லிம்களைக் கொண்ட அரபு அல்லாத மத்திய கிழக்கு நாடுகளாகத் திகழ்கின்றன. 

மேலும், முஸ்லிம்களைச் சிறுபான்மையினராகக் கொண்டவைகளாக உலக முழவதிலும் உள்ள பல்வேறு நாடுகள் திகழ்கின்றன, அவையாவன, லத்தீன் அமெரிக்க நாடுகள், ஆஸ்த்திரேலியா, ரஷ்யாவின் பல்வேறு மாகாணங்கள், அவற்றின் புதிய சுதந்திர நாடுகள், இந்தியா மற்றும் மத்திய ஆப்ரிக்கா ஆகியவைகளாகும். குறிப்பாக 6 மில்லியன் முஸ்லிம்கள் அமெரிக்காவில் வசிக்கின்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலே உள்ள புள்ளி விபரத்தில் மொத்த முஸ்லிம் சமுதாயாத்தில் வெறும் 18 சதவீதமானோர் தான் அரபு தேசத்தைச் சேர்ந்தவர்கள் என்னும் பொழுது, முஸ்லிம்கள் அனைவரும்அரபுக்கள் என்பது தவறாக வாதமாகும். மேலும், இந்தோனேசியா, தைவான், கொரியா, மலேசியா ஆகிய நாடுகளில் உள்ள முஸ்லிம்கள் அனைவரும் தாங்களாக இஸ்லாம் என்னும் வாழ்க்கை நெறியை ஏற்றுக் கொண்டவர்கள் என்பதும், இதில் கொரியாவில் இன்றளவும் வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்கள் அனைவரும், இரண்டாம் உலகப் போரின் பொழுது, துரக்கிய ராணுவ வீரர்களின் நேர்மையான நடைமுறைகளைக் கண்டு முஸ்லிம்களாக ஆனவர்கள் என்பதும், வரலாறு தன்னுள் பதித்து வைத்திருக்கின்ற செய்தி என்பது எத்தனை பேருக்குத் தெரியும்.


துணுக்குச் செய்தியாக, இந்தக் கொரிய முஸ்லிம்களுக்காகவே இப்பொழுது தான் குர்ஆனே மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்பதும், இதற்குப் பொறுப்பாளராக கேரளாவைச் சேர்ந்தவர் இருக்கின்றார் என்பது இந்திய முஸ்லிம்கள் பெருமைப்படக் கூடிய அம்சமாகும்.

மேலும், ஆஸ்த்திரேலியாவில் உள்ள அப்ஹோரிஜின்ஸ் என்ற பழங்குடியினர் தங்களை முஸ்லிம்கள் என்று அழைத்துக் கொள்கின்றனர். இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் என்னவெனில், தாங்கள் பன்றிக் கறியைச் சாப்பிடுவதில்லை என்பதேயாகும். முஸ்லிம்கள் பன்றிக் கறி சாப்பிடுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

முஸ்லிம்கள் எல்லோரும் அரபுக்கள் என்றால், இந்த ஆஸ்திரேலியப் பழங்குடிகள் யார்?! என்பதும், இவர்கள் எந்த அடக்குமறையின் கீழ் இஸ்லாத்தைத் தழுவினார்கள் என்பதையும் ஆராய வேண்டியது நம்முடைய கடமையுமாகும். 

ஏனெனில் இந்தியத் துணைக்கண்டத்தைத் தாண்டி எந்த முஸ்லிம் படையும், எந்த அரபுப் படையும் செல்லவில்லை என்பதும், பல்வேறு நாடுகளுக்கு அரபுக்கள் வியாபாரிகளாகத் தான் சென்று வந்தார்கள் என்பதும், அவர்களது நேர்மை, நாணயம், ஒழுக்கம் ஆகியவற்றைக் கண்டு, இன்று முஸ்லிம்களாக வாழ்ந்து கொண்டிருப்பவர்களின் முன்னோர்கள் இஸ்லாத்தைத் தழுவியதன் காரணமாகத் தான், உலக முழவதும் முஸ்லிம்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதும் தான் வரலாற்று உண்மையுமாகும்.

No comments: