Translate

Sunday, January 22, 2017

குற்றங்கள் குறைய வேண்டுமானால் கடுமையான தண்டனைகள் அவசியம்: - சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி பரிந்துரை

(இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புக்கள்)

இஸ்லாமிய மார்க்கம் காட்டுமிராண்டிகளின் மார்க்கம்; அதில் கூறப்பட்டுள்ள சட்டங்கள் காட்டுமிராண்டித்தனமானவை; பிற்போக்கானவை; மனித தன்மையற்ற சட்டங்கள் என்றெல்லாம் யார் யார் பேசினார்களோ அவர்களது வாய்களில் இருந்தே, “குற்றங்கள் குறைய வேண்டுமானால் கடுமையான தண்டனைகள் அவசியம்” என்ற இஸ்லாத்தின் நிலைப்பாட்டை வல்ல இறைவன் வரவைத்துள்ளான். இஸ்லாம் கூறும் இந்த நிலைப்பாட்டை மத்திய அரசிற்கு பரிந்துரை செய்து ஒரு நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார். அது குறித்த  விபரங்கள் இதோ:

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மையை அகற்ற சட்டம் கொண்டு வருவது குறித்து மத்திய அரசு ஆலோசிக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு நீதிபதி என்.கிருபாகரன் தெரிவித்துள்ளார்.

காப்பகம்:

இங்கிலாந்து நாட்டை சேர்ந்தவர் ஜான்சன். இவர், தமிழகத்தில் உள்ள ஏழை மாணவர்கள் காப்பகத்துக்கு கடந்த2011–ம் ஆண்டு வந்துள்ளார். அப்போது அந்த காப்பகத்தில் தங்கியிருந்து 9–ம் வகுப்பு படிக்கும் 15 வயது மாணவன் ஒருவனுக்கு நல்ல கல்வி வழங்குவதாக கூறி, அவனை தன்னுடன் டெல்லிக்கு வரும்படி கூறியுள்ளார். அந்த மாணவனின் தாயாருக்கு பணமும் கொடுத்துள்ளார். பின்னர், தாயின் சம்மதத்துடன், அந்த மாணவனை தன்னுடன் டெல்லிக்கு கடந்த 2011–ம் ஆண்டு ஏப்ரல் 15–ந் தேதி அழைத்து சென்றுள்ளார்.

டெல்லியில் உள்ள ஒய்.எம்.சி.ஏ. சுற்றுலா விடுதியில், ஒரு அறையில் அந்த மாணவனுடன் ஜான்சன் தங்கியுள்ளார். அப்போது, அந்த மாணவனுக்கு ‘செக்ஸ்’ தொந்தரவு செய்து, வலுகட்டாயமாக இயற்கைக்கு மாறாக உறவு கொண்டுள்ளார்.

போலீசில் புகார்:

பின்னர், அவனை டெல்லியிலேயே விட்டு விட்டு, லண்டன் சென்று விட்டார். அந்த மாணவன் பலரது உதவியுடன் சென்னைக்கு திரும்பி வந்துள்ளான்.

அவனிடம் குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் விசாரணை நடத்தியபோது, பாலியல் கொடுமை நடந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து, 2011–ம் ஆண்டு ஆகஸ்டு 18–ந் தேதி போலீசில், குழந்தைகள் நல அமைப்பு நிர்வாகிகள் புகார் செய்தனர். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார்,குற்றப்பத்திரிகையை சம்பந்தப்பட்ட மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் தாக்கல் செயதுள்ளனர். ஜான்சனுக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை என்பதால், அவருக்கு எதிராக கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்தது. பின்னர்,இந்த பிடிவாரண்டு அடிப்படையில் ஜான்சன் தேடப்படும் நபர் என்று இன்டர்போல் போலீசார் அறிவிப்பு வெளியிட்டனர்.

அதிகாரம் இல்லை:

இந்த நிலையில், தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்கையும், தேடப்படும் நபர் என்று சர்வதேச போலீசார் வெளியிட்டுள்ள அறிவிப்பையும் ரத்து செய்யவேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டில், ஜான்சன் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை நீதிபதி என்.கிருபாகரன் விசாரித்தார். பின்னர், அவர் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:–



உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன்

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. கடந்த 9–ந் தேதி டெல்லியில், ஒரு குழந்தையை சிலர் கூட்டாக சேர்ந்து கற்பழித்துள்ளனர். இப்படிப்பட்ட நபர்களுக்கு இருக்கிற சட்டத்தில் வழங்கப்படும் தண்டனையுடன், கூடுதலாக ‘அறுவை சிகிச்சை மூலம் ஆண்மையை அகற்றும்’தண்டனையையும் வழங்கவேண்டும்.

இப்படி ஒரு கருத்தை இந்த ஐகோர்ட்டு தெரிவிப்பதை கண்டிப்பாக பலர் எதிர்பார்கள். கண்டனம் தெரிவிப்பார்கள். இந்த கருத்து காட்டுமிராண்டித்தனமானது, கொடூரமானது, கற்காலத்துக்கு அழைத்து செல்வது, மனித தன்மை இல்லாதது என்றெல்லாம் கூறுவார்கள். இது எனக்கு நன்றாக தெரியும்.

ஆனால், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் ஒவ்வொரு ஆண்டும் அதிகரித்துக்கொண்டே வருகிறது.2012–ம் ஆண்டு 38 ஆயிரத்து 172 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது 2013–ம் ஆண்டு 58 ஆயிரத்து 224வழக்குகளாகவும், 2014–ம் ஆண்டு 89 ஆயிரத்து 423 வழக்குகளாகவும் அதிகரித்துள்ளது.

இந்த கொடூர குற்றங்களை செய்பவர்களுக்கு, கொடூரமான தண்டனை வழங்கினால்தான், குற்றங்களை தடுக்க முடியும். ஆனால், மனித உரிமை ஆர்வலர்கள் என்று கூறிக்கொள்பவர்கள், கண்டிப்பாக கூச்சல் போடுவார்கள் என்பது நன்றாக எனக்கு தெரியும்.

ஆனால், அப்படிப்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள், குற்றவாளிகளுக்கு ஏற்படும் மனித உரிமை மீறல்களை மட்டும் கருத்தில் கொள்ளக்கூடாது. பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட நபர்களையும் அவர்கள் கருத்தில் கொள்ளவேண்டும்.

அறிவிப்புக்கு தடை:

மாஜிஸ்திரேட்டு முன்பு மாணவன் அளித்த ரகசிய வாக்குமூலத்தில், தன்னை ஜான்சன் பாலியல் கொடுமை செய்தார் என்று கூறியுள்ளார். எனவே, ஜான்சன் மீதான குற்றச்சாட்டின் உண்மை நிலவரம், நீதிமன்றம் மேற்கொள்ளும் விசாரணையின் மூலமே தெரியவரும். எனவே, ஜான்சன் மீதான வழக்கை ரத்து செய்ய முடியாது. அதே நேரம், அவரை தேடப்படும் நபராக சர்வதேச போலீசார் அறிவித்துள்ளதால், அவர் தன் மீதான வழக்கை எதிர்கொள்ள இந்தியாவுக்கு வர முடியவில்லை என்று கூறியுள்ளார். எனவே, தேடப்படும் நபர் என்ற அறிவிப்புக்கு மட்டும் தடை விதிக்கின்றேன். இந்த மனுவை தள்ளுபடி செய்கிறேன்.

காட்டுமிராண்டி தண்டனை:

கற்பழிப்பு குற்றத்துக்கு ஆண்மை அகற்றும் தண்டனை காட்டுமிராண்டித்தனமான சட்டமாக இருக்கலாம். ஆனால்,காட்டுமிராண்டித்தமான குற்றங்களுக்கு, காட்டுமிராண்டித்தனமான தண்டனைத்தான் நிச்சயமாக வழங்க வேண்டும். ஆனால், பலர் இதை ஏற்க மாட்டார்கள்.

ஆனால், சமுதாயத்தில் நடைபெறும் கொடூர குற்றங்களை தடுக்க இதுபோன்ற தண்டனையை மக்கள் ஆதரிக்கவேண்டும். கடுமையான தண்டனைகள்தான், குற்றவாளிகளுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும். எனவே,இதுகுறித்து கொள்கை முடிவுகளை எடுக்கவேண்டியவர்கள், இதுகுறித்து ஆலோசிக்கவேண்டும். இந்த கடுமையான தண்டனை சமுதாயத்துக்கு தேவைப்படுகிறது. மனித உரிமைகள் என்று காரணம் கூறி, இந்த கடுமையான தண்டனையை ஒதுக்கி வைக்கக்கூடாது. போலாந்து, ரஷியா, அமெரிக்காவில் கலிபோர்னியா உள்ளிட்ட 9மாகாணங்களில் இதுபோன்ற தண்டனை வழங்கப்படுகிறது. ஆசியா கண்டத்தில் தென்கொரியா நாடு இந்த தண்டனையை அமல்படுத்தியுள்ளது. எனவே, வெளிநாட்டினரால், இந்திய குழந்தைகள் பாலியல் கொடுமைக்கு ஆளாகும் சம்பவம் அதிகரித்துள்ளதால், இந்த கடுமையான தண்டனை கொண்டு வரவேண்டும் என்று பரிந்துரை செய்கிறேன்.

தற்போது பெற்றோர் இருவரும் பணிக்கு செல்வதால், குழந்தைகள் மூன்றாம் நபர் பராமரிப்பில் விட்டு செல்லவேண்டியதுள்ளது. எனவே, குழந்தைகளை பராமரிக்க பெற்றோரில் ஒருவர் வீட்டில் இருந்து கவனித்து கொள்ளவேண்டும். மேலும் குழந்தைகளின் நலன் கருதி கூட்டுக்குடும்ப முறையை மீண்டும் கொண்டு வர பெற்றோர்கள் ஆலோசிக்க வேண்டும்.

பாலியல் குற்றங்கள் மது போன்ற போதை பழக்கங்களினால்தான் அதிக அளவு நடைபெறுகின்றன. எனவே,மகாத்மா காந்தி உள்ளிட்ட தலைவர்கள் விரும்பிய, மதுவிலக்கை அமல்படுத்த மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

ஆண்மை அகற்றுதல்:

இந்த பரிந்துரைகளை தவிர, கீழ் கண்ட உத்தரவுகளை மத்திய மாநில அரசுகளுக்கு பிறப்பிக்கின்றேன்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடும் நபர்களுக்கு இருக்கின்ற சட்டத்தில் உள்ள தண்டனைகள் போக, கூடுதல் தண்டனையாக ‘அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை அகற்றும் முறையை’ சட்டமாக கொண்டு வர மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.

இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

அதாவது குற்றங்களைச் செய்தவர்களுக்கு வழங்கப்படும் தண்டனையைப் பார்த்து விட்டு மனிதாபிமானம் பேசக்கூடியவர்கள்; பாதிக்கப்பட்டவரது நிலையில் இருந்து பாருங்கள்; அவர்களுக்குத்தான் மனிதாபிமானம் காட்ட வேண்டும் என்று கூறியுள்ள கருத்துக்களை போலி மனிதநேயம் பேசுவோர் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேலும் அவரது தீர்ப்பில், “பெற்றோர் இருவரும் பணிக்கு செல்வதால், குழந்தைகள் மூன்றாம் நபர் பராமரிப்பில் விட்டு செல்லவேண்டியதுள்ளது. எனவே, குழந்தைகளை பராமரிக்க பெற்றோரில் ஒருவர் வீட்டில் இருந்து கவனித்து கொள்ளவேண்டும்.” என்று கூறியுள்ள வரிகள் இன்னும் நாம் ஆழமாக சிந்திக்க கடமைப்பட்டவை.

ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலைக்குச் செல்வதால் ஏற்படும் பிரச்சனைகள் கொஞ்ச நெஞ்சமல்ல; ஆண்கள் தான் பெண்களுக்கு பொறுப்பாளர்கள்; அவர்களை நிர்வகிக்கக் கூடியவர்கள் என்று இஸ்லாம் கூறும் தீர்ப்பை அப்படியே மேலும் வழிமொழிந்துள்ளார்.

என்னதான் இஸ்லாத்தை எதிர்த்து எவ்வளவு குட்டிக்கரணங்கள் அடித்தாலும் இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்கள் தான் மனித வாழ்வில் நடக்கும் அத்துனை பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு என்பதை நாளுக்கு நாள் உறுதிப்படுத்தப்பட்டுக் கொண்டே வருகின்றது.

அல்ஹம்துலில்லாஹ்....

Thanks OnlinePJ

Wednesday, July 22, 2015

கிறிஸ்தவ பாதிரியார் தனிமையில் பிரார்த்தனை என கூறி இளம் பெண் கற்பழிப்பு : தீர்வு தான் என்ன?

செய்தி :
கிறிஸ்தவ பாதிரியார் தனிமையில் பிரார்த்தனை என கூறி   இளம் பெண் கற்பழிப்பு

திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் ஜான். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபையில் பாதிரியாராக உள்ளார். இவரது சபைக்கு வந்த இளம்பெண் ஒருவரை பாதிரியார் ஜான் மிரட்டி கற்பழித்துவிட்டதாக அந்த பெண்ணின் உறவினர்கள் நெய்யாற்றின்கரை போலீசில் புகார் செய்தனர்.

என்னிடம் தனிமையில் பிரார்த்தனை நடத்துவதாக கூறி பாதிரியார் ஜான் மிரட்டி கற்பழித்து விட்டார்.மேலும் இதுபற்றி வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக என்னை மிரட்டினார். அவரது தொந்தரவு அதிகமானதால் எனது உறவினர்களிடம் எனக்கு நடந்த கொடுமைகளை தெரிவித்தேன் என்று கூறியிருந்தார்.

பிரச்சனையின் ஆணிவேர் 

இந்த பாதிரியார் ஒழுங்கா கல்யாணம் பண்ணி இருந்தா இந்த கேடுகெட்ட நிலக்கு தள்ளப்பட்டு இருக்க வேண்டியதில்லை , 

ஒருமுறை சிக்கிய பெண் , அவளை மிரட்டி பலமுறை சீர்அழித்து இருக்கும் மனோநிலை துறவறம் என்ற விடயத்திற்கு சம்பந்தம் இல்லாத விடயம். 

இந்த பெண் வெளியே சொல்லிவிட்டாள் ,  அதனால்  வெளியே வந்து விட்டடது ,   இன்னும் சொல்லாத ஏராளமான அப்பாவிகள் பாதிக்கபட்டுகொண்டு தான் இருப்பார்கள், வெளியில் சொல்லாத வரை.

துறவறம் என்று சொல்லிக்கொண்டு , அடுத்தவர்களின் (அப்பாவி  பெண்களின் ) வாழ்க்கை சீரழித்துக்கொண்டு இருப்பது தடுக்கப்படவேண்டும் ,

நிதர்சனமாக பார்த்தால் உயிர்கள் ஜோடியாக தான் படைக்க பட்டிருகின்றார்கள் , அவர்கள் ஜோடி இல்லாமல் வாழ்வது (துறவறம்) நிதர்சனத்தில் செயல்படுத்த கடினமான விடயம். 

 துறவறம் இருக்கின்றேன் என்று சொல்லிகொள்ளும் ஒவ்வொருவரின் பின்புலத்தை ஆராய்ந்தால் , பல விடயங்கள்  துறவறத்துக்கு சம்பந்தமில்லாத (திரைமறைவில்) இருபது புலப்படும் .

உயிரினம் இயற்கையாகவே தன் எதிர் பாலினத்தை ஈர்க்கும் விதமாக படைக்கப்பட்டு இருகின்றது , என்பதனை மறந்து இயற்கைக்கு எதிராக துறவறம் என்று சொல்லிக்கொண்டு திரிந்தால் இப்படிதான் ஒரு நாள் இல்லை மறுநாள் ,குட்டு வெளிப்பட்டு கேவலப்பட்டு நிற்க வேண்டும். 

இது மட்டும் தான பிரச்சனை? , இல்லை !!!!, இது பிரச்சனையின் ஒரு காரணி மட்டுமே !!!!

  • ஆணும் பெண்ணு தனித்து இருப்பது அல்லது தனித்து இருக்கும் சூழலில் சிக்கிகொல்வது,( இந்த செய்தியில் அப்படிப்பட்ட சூழல் திட்டமிட்டு உருவாக்கபட்டுள்ளது )
  • கவனத்தை ஈர்க்கும் வகையில்  உடை ( அரைகுறை ஆடை  /உடலமைப்பு தெரியும் வண்ணம் இறுக்கமாக) அணிவது 
  • பெண்கள் சக ஆண்களிடம் குழைந்து பேசுவது 
  • இன்னும் பல , 

ஒரு ஐ.ஏ.ஸ் பெண் அதிகாரிக்கு நடந்த மற்றுமொரு சம்பவத்தை பார்த்தால் புரியவரும், 

ஒருமுறை ஐ.ஏ.ஸ். பெண் அதிகாரி ரூபன் தியோல் அவர்கள் இறுக்கமான ஸ்கட் அணிந்திருந்ததால் அவரது பின்புறம் கவர்ச்சியாக தெரிந்ததைக் கண்ட டி.ஜி.பி கில் அவர்கள் உணர்ச்சி மேலீட்டால் அவரது பெட்டெக்ஸை தடவி விட்டு அது பெரிய சர்ச்சைக்குள்ளானது.
அது பொதுவான இடம் என்பதால் அவரால் அத்துடன் நிருத்திக்கொள்ள முடிந்தது அதுவே தனிப்பட்ட இடமாக இருந்தால் வேறு விதமான அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கலாம்.
( இன்று அவ்வாறே அதிகம் நிகழ்ந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம். )

பெண்களே ! மதத்தின் பெயரால் குருட்டு நம்பிக்கை கொண்டு தனி பூஜை பிரார்த்தனை என்று அதீத நம்பிக்கை வைக்காமல் ,பெண்கள் தங்களை சமயோசிதமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

அத்து மீறல் இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்க, ஐரோப்பாவில் 6 நிமிடத்தறிகு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள்.

இதற்கு எது காரணம் என்றுக் கண்டறிய பல சமுதாயத் தொண்டு நிருவனங்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஆய்வு செய்த வகையில் சென்ற வருடம் அம்னஸ்டி அமைப்பு உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்களிடத்தில் நடத்திய கருத்து கணிப்பில் 25 க்கும் மேற்பட்ட சதவிகித இளைஞர்கள் பெண்கள் அணியும் செக்ஸியான உடையேக் காரணம் என்றும் இதையே அயர்லாந்தில் 40 சதவிகித இளைஞர்கள் வழி மொழிந்தனர் என்றும் அம்னஸ்டி உலகுக்கு அறிவித்தார்கள்.

மேற்காணும் அம்னஸ்டி அமைப்பினர் பெண்களைக் கொண்டு கேளிக்கை நிருவனங்கள் நடத்தக் கூடியவர்கள் அல்ல, மாறாக உலகம் முழுவதிலும் பாதிக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள். இவர்கள் ஆய்வு செய்து அறிவித்த தகவலை உலகம் ஏற்றுக் கொள்வதா ? அல்லது பெண்களை போகப் பொருளாக்கி வயிற்றுப் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் கேளிக்கை நிருவனத்தார்கள் நடத்தும் பட்டிமன்றத் தகவலை ஏற்றுக் கொள்வதா?

இதற்கு தீர்வு தான் என்ன :

கடவுளுக்காக ஒருவன் ஆண்மையை இழக்கக் கூடாது. இஸ்லாத்தில் துறவறம் மேற்கொள்வதற்குத் தடை இருக்கின்றது. ஏன்? துறவறத்தை மேற்கொள்வதனால் கடவுளுக்கு என்ன நன்மை? துறவறத்தை மேற்கொள்பவனுக்கும் நன்மை இல்லை. கடவுளுக்கும் நன்மை இல்லை.

மனித சக்திக்கு அப்பாற்பட்டு என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்கிறேன் என்றிருந்தால் ஒரு சமயம் இல்லாவிட்டால் மற்றொரு சமயத்தில் நீ தவறிழைக்க முற்பட்டு விடுவாய் என்று இஸ்லாம் அறிவுரை பகர்கின்றது.

ஒருவன் கடவுளுக்கென்று தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க அர்ப்பணிக்க அவனது மதிப்பு எல்லா மதங்களிலும் உயரும். இஸ்லாத்தைப் பொறுத்த வரை கடவுளுக்கு வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்கின்றேன். உலகத்தைப் புறக்கணிக்கின்றேன் என்றால் அவனுடைய பதவி இறங்கும். இன்னும் சொல்லப் போனால் இஸ்லாத்திற்கும், அவனுக்கும் சம்பந்தமே இல்லை

ஒரு மனிதன் ஆன்மீகத்தில் கூடுதலான ஈடுபாடு வைத்திருந்தால் அவருக்குக் கடவுள் தன்மை வந்து விட்டது என்று பலரும் நினைக்கின்றனர். அவரை வழிபடவும் துணிந்து விடுகின்றனர்.

இப்படிப்பட்ட நம்பிக்கையை தான் பலரும் தவறாக பயன்படுத்திக்கொள்ள துணிகின்றனர்.
பல கோணங்களில் பலவிதமான தவறுகள் வெளிவருவதை செஇதிகலாகா தினமும் படித்துகொண்டு தான் இருகின்றோம் .

ஆன்மீகத்தில் எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் சரி மனிதன் கடவுளாக ஆக முடியாது. மனிதன் எந்த நிலையிலும் மனிதனாகத் தான் இருக்க முடியும் என்று இஸ்லாம் கூறுகின்றது.


அடுத்த தீர்வு :  

பெண்கள் மற்ற ஆண்களுன் எந்த தருணத்திலும் ,தனித்து இருக்க கூடாது 

பெண்களின் உடம்பில் எதாவது ஒரு இடம் தெரிந்தாலும் ஆண்களின் விரசப் பார்வைகள் அங்கு சென்று மேயாமல் திரும்புவதில்லை என்பதுவே யதார்த்த நிலை.

பெண்களின் கழுத்து மீது ஆண்கள் விடும் பெருமூச்சுகள், உரசல்கள் ஆபாச இழைவுகளிலிருந்து பெண் தன்னை காத்துக் கொள்வது பெரும் பாடாகிறது என்று
தினமனி கதிரில் (4-2009-ல்) பெருமூச்சு விட்டிருந்தார்
-ஜோதிர் லதா கிரிஜா அவர்கள்.

ஆண், பெண் கலந்திருக்கும் இடங்களில் பெண் தன்னை மறைத்து நடப்பதுவே சிறந்ததென்று ஜோதிர் லதா கிரிஜாவின் கருத்தாக இருக்கிறது 

இஸ்லாமும் அவ்வாறேக் கூறுகிறது


பெண்களை எப்படி வேண்டுமானாலும் வீதியில் நடந்து கொள்ளுங்கள் உங்கள் மீது கை வைக்கும் ஆண்களை கொல்வோம் என்றுக்கூறி ஒரு சாராருக்கு (ஆண் வர்க்கத்திற்கு ) மட்டும் அநீதி இழைக்க வில்லை இஸ்லாம்கற்பழிக்கும் ஆண்களுக்கு மரண தன்டனையை தீர்ப்பாக ,கற்பழிப்புகளுக்கு தூண்டும் அனைத்து அம்சங்களையும் பட்டியலிட்டுக் கூறி அவற்றை தடுத்துக் கொள்ளும் படி பெண்களுக்கும் கட்டளையிட்டது.

இப்பொழுது இருக்கும் சட்டதினால் இன்றைய நிலை ,
நாளையும் தொடர்ந்துகொன்ன்டு தான் இருக்க போகின்றது , 

இஸ்லாம் சொல்லும் தீர்வை செயல்படுத்தினால், நாளைய சமுதாயமாவது இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடும்.