Translate

Monday, July 13, 2009

நல்லறம் செய்யும் யூத, கிறித்தவர்களுக்குக் கவலை இல்லை ??? - திருக்குர்ஆன் 2:62

திருக்குர்ஆன் 2:62 வசனத்தில் நல்லறம் செய்யும் யூத, கிறித்தவர்களுக்குக் கவலை இல்லை என்று கூறப்படுகின்றது. இந்த அடிப்படையில் யூத, கிறித்தவர்களை காஃபிர்கள் என்று கூறுவது சரியா?

நம்பிக்கை கொண்டோர், யூதர்கள், கிறித்தவர்கள், மற்றும் ஸாபியீன்களில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, நல்லறம் செய்வோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உண்டு. அவர்களுக்கு எந்தப் பயமும் இல்லை. கவலைப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 9:60)


இந்த வசனத்தில், நல்லறம் செய்யும் எல்லா யூத, கிறித்தவர்களுக்கும் கவலை இல்லை என்று கூறப்படவில்லை. யூத, கிறித்தவர்களில் அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பி, அதாவது ஈமான் கொண்டு நல்லறம் செய்பவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை என்று தான் இந்த வசனம் கூறுகின்றது.
யூதர்களும் கிறித்தவர்களும் தமக்கு அருளப்பட்ட வேதத்தை நம்பினால் மறுமையில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது உண்மை தான்.


அவர்களின் வேதங்களில் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களின் வருகை பற்றியும், அவர் வரும் போது அவரைப் பின்பற்றுவது பற்றியும் கட்டளையிடப்பட்டுள்ளது. அந்தக் கட்டளையை அவர்கள் மீறினால் அவர்கள் தமது வேதத்தையே நம்பவில்லை என்பது தான் பொருள்.


நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள், தமது பிள்ளைகளை அறிவது போல் இவரை அறிவார்கள். அவர்களில் ஒரு சாரார் அறிந்து கொண்டே உண்மையை மறைக்கின்றனர்.

அல்குர்ஆன் 2:146


இதே கருத்து 3:71, 6:20, 7:157, 23:69 ஆகிய வசனங்களிலும் கூறப்பட்டுள்ளது.


நபிகள் நாயகம் வருவதற்கு முன் யூதர்களும் கிறித்தவர்களும் தமது வேதங்களின் அடிப்படையில் நடந்து மரணித்திருந்தால் அவர்கள் அஞ்சத் தேவையில்லை.

நபிகள் நாயகம் வந்த பின் அவர்களை ஏற்றுக் கொண்டால் தான் அவர்கள் தமது வேதங்களை நம்பினார்கள் என்று சொல்ல முடியும்.


ஈமான் கொள்ளாத யூத, கிறித்தவர்களை காஃபிர்கள் என்று அழைப்பதில் தவறில்லை. இதைக் கீழ்க்கண்ட வசனத்திலிருந்தும் அறியலாம்.


இவ்வாறே உமக்கு இவ்வேதத்தை அருளினோம். நாம் யாருக்கு வேதத்தை வழங்கினோமோ அவர்கள் இதை நம்புகின்றனர். (வேதம் கொடுக்கப்படாத) இவர்களிலும் இதை நம்புவோர் உள்ளனர். (நம்மை) மறுப்போரைத் தவிர வேறு எவரும் நமது வசனங்களை நிராகரிப்பதில்லை.

அல்குர்ஆன் 29:47


முஹம்மத் (ஸல்) அவர்களை அல்லாஹ்வின் தூதர் என்று நம்பாத, அவர்களுக்கு வழங்கப்பட்ட திருக்குர்ஆனை இறை வேதம் என்று நம்பாத அனைவருமே இஸ்லாத்தின் பார்வையில் காஃபிர்கள் , இறை மறுப்பாளர்கள் தான். காஃபிர்களைத் தவிர வேறு யாரும் நமது வசனங்களை மறுப்பதில்லை என்று இறைவன் கூறுவதிலிருந்து இதை அறிய முடியும்.

Saturday, July 11, 2009

ஜின்கள் மனிதர்களுக்குத் தொந்தரவு செய்ய முடியுமா?

ஜின்கள் மனிதர்களுக்குத் தொந்தரவு செய்ய முடியுமா? ஜின்கள் தன்னை மூச்சுத் திணற அமுக்கியதாகவும் சிலர் கூறுகின்றனர். இவ்வாறு நடக்குமா?

'ஜின்' என்ற பெயரில் ஒரு படைப்பினம் உள்ளதாகத் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. இந்த இனத்தவர் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் என்பதால் மனிதர்களின் கண்களுக்குத் தென்பட மாட்டார்கள்.

இந்த விஷயத்தில் இந்தப் படைப்பு வானவர்களைப் போன்றது எனலாம். ஆயினும் இந்தப் படைப்பினர் மனிதர்களைப் போலவே பகுத்தறிவு வழங்கப்பட்டவர்கள். மனிதர்களைப் போலவே சொர்க்கம், நரகத்தை அடைவார்கள். வானங்களுக்குச் சென்று வரும் ஆற்றல் படைத்தவர்களாக திருக்குர்ஆன் ஜின்களைப் பற்றிக் கூறினாலும் மனிதர்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்கும், அடிக்கும், உதைக்கும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.

மனிதர்களின் எண்ணங்களில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும். அதன் மூலம் இறைக் கடமைகளை நிறைவேற்றா வண்ணம் இடையூறுகளை ஏற்படுத்தும்.

மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டு, மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.

(அல்குர்ஆன் 114:1-6)

பலம் பொருந்திய ஜின் ஒன்று நேற்றிரவு என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காகத் திடீரென்று வந்து நின்றது. அல்லாஹ் எனக்கு அதை வசப்படுத்தித் தந்தான். நான் அதைப் பிடித்துக் கொண்டேன். நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் பார்ப்பதற்காக அதைப் பள்üவாசலின் தூண்கüல் ஒன்றில் கட்டி வைக்க விரும்பினேன். அப்போது, என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த, ''என் இறைவா! எனக்குப் பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் அதிகாரத்தை எனக்கு வழங்குவாயாக!''
(38:35)

என்னும் பிரார்த்தனையை நினைவு கூர்ந்தேன். உடனே, அதைச் சபித்து எறியப்பட்டதாகத் திருப்பியனுப்பி விட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள்: புகாரி (3423), முஸ்லிம் (4862)

மனிதனுக்கு நீங்கள் குறிப்பிட்டது போல் தீங்கு செய்யும் என்பதற்கு திருகுர்ஆன், நபிமொழிகளில் ஆதாரங்கள் இல்லை.

Sunday, July 5, 2009

இணைவைக்கும் நிலையில் செய்யப்படும் நற்செயல்கள் இறைவனால் ஏற்கப்படுமா ?

இணைவைக்கும் நிலையில் செய்யப்படும் எந்த நற்செயல் ஆனாலும் இறைவனால் கண்டிப்பாக ஏற்கப்படமாட்டாது. கீழ் காணும் இரண்டு இறைவசனங்கள் அதற்கு சான்றுகளாகும்.

‘அவர்கள் இணைவைத்தால் அவர்கள் செய்து வந்ததெல்லாம் அவர்களை விட்டும் அழிந்துவிடும். (அல்-குர்ஆன்-6:88)

‘நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணைவைப்பதை மன்னிக்கவே மாட்டான். இது அல்லாத பாவங்களை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். இறைவனுக்கு இணைவைப்பவன் வெகு தூரமான வழிகேட்டில் இருக்கிறான். (அல்-குர்ஆன்-4:116)

Saturday, July 4, 2009

இபாதத்

அல்லாஹ்வைத் திருப்திப்படுத்தக்கூடிய வகையில் வெளிப்படையாகவோ,
அந்தரங்கமாகவோ செய்யப்படும் செயல்களையும் சொல்லப்படும் வார்த்தைகளையும் உள்ளடக்கிய ஒரு பரந்து விரிந்த பொருள் கொண்ட சொல் தான் ‘ இபாதத்’ என்ற வணக்க வழிபாடாகும்.


இபாதத்தின் நிபந்தனைகள்

1. எந்த ஒரு வணக்க வழிபாடாக இருந்தாலும் அதை அல்லாஹ்வுக்காக மட்டுமே செய்ய வேண்டும் என்ற தூய்மையான நிய்யத் (எண்ணம்) வேண்டும். அதை பிறரிடம் காட்டுவதற்காகவோ, பிறர் பாராட்டவேண்டுமென்பதற் காகவோ, பிறரிடம் பரிசு பெறவேண்டுமென்பதற்காகவோ செய்யக்கூடாது.

2. எல்லா வணக்க வழிபாடுகளும் நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறைப்படி அமைய வேண்டும். இதுவே நபியைப் பின்பற்றும் முறையாகும்.

Friday, July 3, 2009

இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் விசயங்கள்

பத்து விசயங்கள் ஒருவனை இஸ்லாத்தை விட்டே வெளியேற்றிவிடுகின்றன. அவை பின்வருமாறு :-

1. பலதெய்வ வழிபாடு. (இணைவைத்தல்).

2. பலதெய்வ வழிபாடு செய்பவர்களை நிராகரிப்போர் என நம்பாமலிருத்தல். அல்லது அவர்களின் பலதெய்வக்கொள்கை சரியாகஇருக்குமோ என சந்தேகித்தல்.

3. தனக்கும் அல்லாஹ்வுக்குமிடையே இடைத்தரகர்களை ஏற்படுத்தி அவர்களிடம் தம்தேவைகளை நிறைவேற்றப் பிரார்த்தனை புரிந்துகொண்டு அல்லாஹ்விடம் தமக்கு பரிந்துரை செய்யுமாறு வேண்டுதல்.

4. நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைவிட பிறருடைய வழிகாட்டுதலை சிறந்தது என நம்புதல்.

5. நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த அனைத்தையும் வெறுத்தல்.

6. நபி(ஸல்) அவர்களின் மார்க்கத்தை ஏற்க மறுத்தல். அந்த மார்க்கத்தைப் பின்பற்றுவதால் கிடைக்கும் நற்கூலியைப்பற்றியும் , அதைப் புறக்கணிப்பதால் கிடைக்கும் தண்டனையைப் பற்றியும் பரிகாசம் செய்தல்.

7. சூனியம் செய்தல்.

8. முஸ்லிம்களுக்கு எதிராக இணைவைப்பவர்களை ஆதரித்தல்.

9. மூஸா (அலை) அவர்களின் சட்டங்களுக்கு உட்படாது கிள்ரு(அலை) விதிவிலக்காக இருந்ததைப்போல் நம்முடைய ஷரீஅத்தை பின்பற்றி நடப்பதிலும் நம்மில் சிலருக்கு விதி விலக்கு உண்டு என்று நம்புதல்.

10. அல்லாஹ்வின் மார்க்கத்தை அறிந்து கொள்ளாமலும், அதை நடைமுறையில் பின்பற்றாமலும் விலகிச்செல்லுதல்