Translate

Friday, July 3, 2009

இஸ்லாத்தை விட்டும் வெளியேற்றும் விசயங்கள்

பத்து விசயங்கள் ஒருவனை இஸ்லாத்தை விட்டே வெளியேற்றிவிடுகின்றன. அவை பின்வருமாறு :-

1. பலதெய்வ வழிபாடு. (இணைவைத்தல்).

2. பலதெய்வ வழிபாடு செய்பவர்களை நிராகரிப்போர் என நம்பாமலிருத்தல். அல்லது அவர்களின் பலதெய்வக்கொள்கை சரியாகஇருக்குமோ என சந்தேகித்தல்.

3. தனக்கும் அல்லாஹ்வுக்குமிடையே இடைத்தரகர்களை ஏற்படுத்தி அவர்களிடம் தம்தேவைகளை நிறைவேற்றப் பிரார்த்தனை புரிந்துகொண்டு அல்லாஹ்விடம் தமக்கு பரிந்துரை செய்யுமாறு வேண்டுதல்.

4. நபி(ஸல்) அவர்களின் வழிகாட்டுதலைவிட பிறருடைய வழிகாட்டுதலை சிறந்தது என நம்புதல்.

5. நபி(ஸல்) அவர்கள் கொண்டு வந்த அனைத்தையும் வெறுத்தல்.

6. நபி(ஸல்) அவர்களின் மார்க்கத்தை ஏற்க மறுத்தல். அந்த மார்க்கத்தைப் பின்பற்றுவதால் கிடைக்கும் நற்கூலியைப்பற்றியும் , அதைப் புறக்கணிப்பதால் கிடைக்கும் தண்டனையைப் பற்றியும் பரிகாசம் செய்தல்.

7. சூனியம் செய்தல்.

8. முஸ்லிம்களுக்கு எதிராக இணைவைப்பவர்களை ஆதரித்தல்.

9. மூஸா (அலை) அவர்களின் சட்டங்களுக்கு உட்படாது கிள்ரு(அலை) விதிவிலக்காக இருந்ததைப்போல் நம்முடைய ஷரீஅத்தை பின்பற்றி நடப்பதிலும் நம்மில் சிலருக்கு விதி விலக்கு உண்டு என்று நம்புதல்.

10. அல்லாஹ்வின் மார்க்கத்தை அறிந்து கொள்ளாமலும், அதை நடைமுறையில் பின்பற்றாமலும் விலகிச்செல்லுதல்

1 comment:

irukkam said...

முஸ்லிம்களுக்கு எதிராக இணைவைப்பவர்களை ஆதரித்தல்.

அப்படியானால், பலஸ்தீன மக்களைக் கொன்று குவிக்கும் இணைவைப்பாளர்களான இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் மேற்குலகுக்கும் ஆதரவாக இருக்கும் சவூதி அரேபிய அரசாங்கமும் மன்னர்களும் காபிர்களா? அவர்களின் நிதிகளைப் பெற்றுப் பயனடைந்து வரும் இந்திய இலங்கை வஹ்ஹாபிகளும் காபிர்களா?