Translate

Wednesday, July 22, 2015

கிறிஸ்தவ பாதிரியார் தனிமையில் பிரார்த்தனை என கூறி இளம் பெண் கற்பழிப்பு : தீர்வு தான் என்ன?

செய்தி :
கிறிஸ்தவ பாதிரியார் தனிமையில் பிரார்த்தனை என கூறி   இளம் பெண் கற்பழிப்பு

திருவனந்தபுரம் அருகே உள்ள நெய்யாற்றின்கரை பகுதியை சேர்ந்தவர் ஜான். இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபையில் பாதிரியாராக உள்ளார். இவரது சபைக்கு வந்த இளம்பெண் ஒருவரை பாதிரியார் ஜான் மிரட்டி கற்பழித்துவிட்டதாக அந்த பெண்ணின் உறவினர்கள் நெய்யாற்றின்கரை போலீசில் புகார் செய்தனர்.

என்னிடம் தனிமையில் பிரார்த்தனை நடத்துவதாக கூறி பாதிரியார் ஜான் மிரட்டி கற்பழித்து விட்டார்.மேலும் இதுபற்றி வெளியில் கூறினால் கொலை செய்துவிடுவதாக என்னை மிரட்டினார். அவரது தொந்தரவு அதிகமானதால் எனது உறவினர்களிடம் எனக்கு நடந்த கொடுமைகளை தெரிவித்தேன் என்று கூறியிருந்தார்.

பிரச்சனையின் ஆணிவேர் 

இந்த பாதிரியார் ஒழுங்கா கல்யாணம் பண்ணி இருந்தா இந்த கேடுகெட்ட நிலக்கு தள்ளப்பட்டு இருக்க வேண்டியதில்லை , 

ஒருமுறை சிக்கிய பெண் , அவளை மிரட்டி பலமுறை சீர்அழித்து இருக்கும் மனோநிலை துறவறம் என்ற விடயத்திற்கு சம்பந்தம் இல்லாத விடயம். 

இந்த பெண் வெளியே சொல்லிவிட்டாள் ,  அதனால்  வெளியே வந்து விட்டடது ,   இன்னும் சொல்லாத ஏராளமான அப்பாவிகள் பாதிக்கபட்டுகொண்டு தான் இருப்பார்கள், வெளியில் சொல்லாத வரை.

துறவறம் என்று சொல்லிக்கொண்டு , அடுத்தவர்களின் (அப்பாவி  பெண்களின் ) வாழ்க்கை சீரழித்துக்கொண்டு இருப்பது தடுக்கப்படவேண்டும் ,

நிதர்சனமாக பார்த்தால் உயிர்கள் ஜோடியாக தான் படைக்க பட்டிருகின்றார்கள் , அவர்கள் ஜோடி இல்லாமல் வாழ்வது (துறவறம்) நிதர்சனத்தில் செயல்படுத்த கடினமான விடயம். 

 துறவறம் இருக்கின்றேன் என்று சொல்லிகொள்ளும் ஒவ்வொருவரின் பின்புலத்தை ஆராய்ந்தால் , பல விடயங்கள்  துறவறத்துக்கு சம்பந்தமில்லாத (திரைமறைவில்) இருபது புலப்படும் .

உயிரினம் இயற்கையாகவே தன் எதிர் பாலினத்தை ஈர்க்கும் விதமாக படைக்கப்பட்டு இருகின்றது , என்பதனை மறந்து இயற்கைக்கு எதிராக துறவறம் என்று சொல்லிக்கொண்டு திரிந்தால் இப்படிதான் ஒரு நாள் இல்லை மறுநாள் ,குட்டு வெளிப்பட்டு கேவலப்பட்டு நிற்க வேண்டும். 

இது மட்டும் தான பிரச்சனை? , இல்லை !!!!, இது பிரச்சனையின் ஒரு காரணி மட்டுமே !!!!

  • ஆணும் பெண்ணு தனித்து இருப்பது அல்லது தனித்து இருக்கும் சூழலில் சிக்கிகொல்வது,( இந்த செய்தியில் அப்படிப்பட்ட சூழல் திட்டமிட்டு உருவாக்கபட்டுள்ளது )
  • கவனத்தை ஈர்க்கும் வகையில்  உடை ( அரைகுறை ஆடை  /உடலமைப்பு தெரியும் வண்ணம் இறுக்கமாக) அணிவது 
  • பெண்கள் சக ஆண்களிடம் குழைந்து பேசுவது 
  • இன்னும் பல , 

ஒரு ஐ.ஏ.ஸ் பெண் அதிகாரிக்கு நடந்த மற்றுமொரு சம்பவத்தை பார்த்தால் புரியவரும், 

ஒருமுறை ஐ.ஏ.ஸ். பெண் அதிகாரி ரூபன் தியோல் அவர்கள் இறுக்கமான ஸ்கட் அணிந்திருந்ததால் அவரது பின்புறம் கவர்ச்சியாக தெரிந்ததைக் கண்ட டி.ஜி.பி கில் அவர்கள் உணர்ச்சி மேலீட்டால் அவரது பெட்டெக்ஸை தடவி விட்டு அது பெரிய சர்ச்சைக்குள்ளானது.
அது பொதுவான இடம் என்பதால் அவரால் அத்துடன் நிருத்திக்கொள்ள முடிந்தது அதுவே தனிப்பட்ட இடமாக இருந்தால் வேறு விதமான அசம்பாவிதங்கள் நிகழ்ந்திருக்கலாம்.
( இன்று அவ்வாறே அதிகம் நிகழ்ந்து கொண்டிருப்பதை பார்த்து வருகிறோம். )

பெண்களே ! மதத்தின் பெயரால் குருட்டு நம்பிக்கை கொண்டு தனி பூஜை பிரார்த்தனை என்று அதீத நம்பிக்கை வைக்காமல் ,பெண்கள் தங்களை சமயோசிதமாக பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.

அத்து மீறல் இந்தியாவில் மட்டுமல்லாமல் அமெரிக்க, ஐரோப்பாவில் 6 நிமிடத்தறிகு ஒரு பெண் கற்பழிக்கப்படுகிறாள்.

இதற்கு எது காரணம் என்றுக் கண்டறிய பல சமுதாயத் தொண்டு நிருவனங்கள், சர்வதேச மனித உரிமை அமைப்புகள் ஆய்வு செய்த வகையில் சென்ற வருடம் அம்னஸ்டி அமைப்பு உலகம் முழுவதிலும் உள்ள இளைஞர்களிடத்தில் நடத்திய கருத்து கணிப்பில் 25 க்கும் மேற்பட்ட சதவிகித இளைஞர்கள் பெண்கள் அணியும் செக்ஸியான உடையேக் காரணம் என்றும் இதையே அயர்லாந்தில் 40 சதவிகித இளைஞர்கள் வழி மொழிந்தனர் என்றும் அம்னஸ்டி உலகுக்கு அறிவித்தார்கள்.

மேற்காணும் அம்னஸ்டி அமைப்பினர் பெண்களைக் கொண்டு கேளிக்கை நிருவனங்கள் நடத்தக் கூடியவர்கள் அல்ல, மாறாக உலகம் முழுவதிலும் பாதிக்கப்படும் மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள். இவர்கள் ஆய்வு செய்து அறிவித்த தகவலை உலகம் ஏற்றுக் கொள்வதா ? அல்லது பெண்களை போகப் பொருளாக்கி வயிற்றுப் பிழைப்பு நடத்திக் கொண்டிருக்கும் கேளிக்கை நிருவனத்தார்கள் நடத்தும் பட்டிமன்றத் தகவலை ஏற்றுக் கொள்வதா?

இதற்கு தீர்வு தான் என்ன :

கடவுளுக்காக ஒருவன் ஆண்மையை இழக்கக் கூடாது. இஸ்லாத்தில் துறவறம் மேற்கொள்வதற்குத் தடை இருக்கின்றது. ஏன்? துறவறத்தை மேற்கொள்வதனால் கடவுளுக்கு என்ன நன்மை? துறவறத்தை மேற்கொள்பவனுக்கும் நன்மை இல்லை. கடவுளுக்கும் நன்மை இல்லை.

மனித சக்திக்கு அப்பாற்பட்டு என்னை நானே கட்டுப்படுத்திக் கொள்கிறேன் என்றிருந்தால் ஒரு சமயம் இல்லாவிட்டால் மற்றொரு சமயத்தில் நீ தவறிழைக்க முற்பட்டு விடுவாய் என்று இஸ்லாம் அறிவுரை பகர்கின்றது.

ஒருவன் கடவுளுக்கென்று தன் வாழ்க்கையை அர்ப்பணிக்க அர்ப்பணிக்க அவனது மதிப்பு எல்லா மதங்களிலும் உயரும். இஸ்லாத்தைப் பொறுத்த வரை கடவுளுக்கு வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்கின்றேன். உலகத்தைப் புறக்கணிக்கின்றேன் என்றால் அவனுடைய பதவி இறங்கும். இன்னும் சொல்லப் போனால் இஸ்லாத்திற்கும், அவனுக்கும் சம்பந்தமே இல்லை

ஒரு மனிதன் ஆன்மீகத்தில் கூடுதலான ஈடுபாடு வைத்திருந்தால் அவருக்குக் கடவுள் தன்மை வந்து விட்டது என்று பலரும் நினைக்கின்றனர். அவரை வழிபடவும் துணிந்து விடுகின்றனர்.

இப்படிப்பட்ட நம்பிக்கையை தான் பலரும் தவறாக பயன்படுத்திக்கொள்ள துணிகின்றனர்.
பல கோணங்களில் பலவிதமான தவறுகள் வெளிவருவதை செஇதிகலாகா தினமும் படித்துகொண்டு தான் இருகின்றோம் .

ஆன்மீகத்தில் எவ்வளவு உயர்ந்த நிலைக்குச் சென்றாலும் சரி மனிதன் கடவுளாக ஆக முடியாது. மனிதன் எந்த நிலையிலும் மனிதனாகத் தான் இருக்க முடியும் என்று இஸ்லாம் கூறுகின்றது.


அடுத்த தீர்வு :  

பெண்கள் மற்ற ஆண்களுன் எந்த தருணத்திலும் ,தனித்து இருக்க கூடாது 

பெண்களின் உடம்பில் எதாவது ஒரு இடம் தெரிந்தாலும் ஆண்களின் விரசப் பார்வைகள் அங்கு சென்று மேயாமல் திரும்புவதில்லை என்பதுவே யதார்த்த நிலை.

பெண்களின் கழுத்து மீது ஆண்கள் விடும் பெருமூச்சுகள், உரசல்கள் ஆபாச இழைவுகளிலிருந்து பெண் தன்னை காத்துக் கொள்வது பெரும் பாடாகிறது என்று
தினமனி கதிரில் (4-2009-ல்) பெருமூச்சு விட்டிருந்தார்
-ஜோதிர் லதா கிரிஜா அவர்கள்.

ஆண், பெண் கலந்திருக்கும் இடங்களில் பெண் தன்னை மறைத்து நடப்பதுவே சிறந்ததென்று ஜோதிர் லதா கிரிஜாவின் கருத்தாக இருக்கிறது 

இஸ்லாமும் அவ்வாறேக் கூறுகிறது


பெண்களை எப்படி வேண்டுமானாலும் வீதியில் நடந்து கொள்ளுங்கள் உங்கள் மீது கை வைக்கும் ஆண்களை கொல்வோம் என்றுக்கூறி ஒரு சாராருக்கு (ஆண் வர்க்கத்திற்கு ) மட்டும் அநீதி இழைக்க வில்லை இஸ்லாம்கற்பழிக்கும் ஆண்களுக்கு மரண தன்டனையை தீர்ப்பாக ,கற்பழிப்புகளுக்கு தூண்டும் அனைத்து அம்சங்களையும் பட்டியலிட்டுக் கூறி அவற்றை தடுத்துக் கொள்ளும் படி பெண்களுக்கும் கட்டளையிட்டது.

இப்பொழுது இருக்கும் சட்டதினால் இன்றைய நிலை ,
நாளையும் தொடர்ந்துகொன்ன்டு தான் இருக்க போகின்றது , 

இஸ்லாம் சொல்லும் தீர்வை செயல்படுத்தினால், நாளைய சமுதாயமாவது இப்படிப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடும்.


Monday, July 13, 2015

எனதருமை இஸ்லாமிய சொந்தங்களுக்கு ஓர் வேண்டுகோள்

எனதருமை இஸ்லாமிய சொந்தங்களுக்கு ஓர் வேண்டுகோள் :----

மக்களை நன்மையின் பக்கம் அழைபதர்காக எதை செய்தாலும் சரிதான் என்ற நோக்கில் தான் அந்த பெரியார் அப்படி செய்தார் இந்த பெரியார் இப்படி செய்தார் என கதைகளை எழுதி வைத்தனர்... அனால் அவை மனிதன் வார்த்தைகள் என்பதால் முன்னுக்குபின் முரணாகி அல்லாஹ்வை மட்டும் தான் வணங்கவேண்டும் என்பது உடைந்து பெரியார்களை வணங்கலாம் என்றுமாரி தர்ஹாக்களுமாக அவுளியாக்களுமாக சுற்றித்திரிகிறது...

மக்கள் தொழவேண்டும் என்பதற்காக அந்த பெரியார் அவ்வளவு நேரம் தொழுதார் இப்படியெல்லாம் தொழுதார் என கதைகள் சொல்ல ஆரம்பம் செய்ததுதான் ...

அந்த பெரியார்களை அவுளியாக்களுமாக ஆக்கி பின் கடவுளாகவும் சித்தரிக்க செய்து பெரும் பாவத்தை மக்களை செய்ய வைத்தது... எனவே ஒருவர் நன்மைசெய்யவேண்டும் என நீங்கள் யாரேனும் நினைத்தால் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறிய உண்மைகளை (ஹதீஸ்) மட்டும் கூறி இஸ்லாத்தின் பக்கம் அழையுங்கள்...தேவையற்ற கட்டுகதைகளை அல்லாஹ்வின் பெயராலும் இஸ்லாத்தின் பெயராலும் முஹம்மது (ஸல்) அவர்கள் பெயராலும் இட்டுகட்டாதீர்கள்...

நீங்கள் உண்மையாகவே முஹம்மது (ஸல் ) அவர்களை நேசிப்பதாக இருந்தால் அவர்களின் தெளிவான போதனைகளை மட்டும் மற்றவருக்கு எடுத்து சொல்லுங்கள்...ஏனென்றால் முஹம்மது (ஸல்) அவர்கள்தான் கடைசி தூதர் ,அவர்களுக்கு பின் வந்த இமாம்களோ பெரியார்களோ அல்ல (சஹாபாக்கள் கூட இல்லை),  எனவே நாம் பின்பற்ற வேண்டியது நமது இறுதி தூதர் நபிகள் நாயகம் சல்லாஹு வலைவசல்லாம் அவர்கனின் அவர்கள் கூறிய உண்மைகளை (ஹதீஸ்) மட்டும் தான்.

Saturday, March 21, 2015

சாவுக்கடல் சாசனச் சுருள்கள்

இந்த வசனத்தில் (18:9) குகையில் தங்கியவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போது, குகைவாசிகள் என்று மட்டும் குறிப்பிட்டால் போதும். அத்துடன் குகைக்கும் ஏட்டுக்கும் உரியவர்கள் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.
அப்படியானால் ஒரு ஏடு இவர்களது வரலாற்றுடன் முக்கியமான இடத்தைப் பிடித்திருக்கிறது என்று தெரிகிறது.
ஏதோ ஓர் ஏட்டை அவர்கள் வைத்திருந்தார்கள் என்பதற்காக மட்டும் இவ்வாறு நிச்சயமாகக் கூறப்பட்டிருக்காது. "அந்த ஏடு' என்று குறிப்பிட்டுச் சொல்வதென்றால் அது ஒரு முக்கியமான ஏடாக இருக்க வேண்டும்.
அந்த ஏடு ஒரு காலத்தில் கண்டெடுக்கப்பட்டு மக்களுக்கு அதில் உள்ள உண்மைகள் தெரிய வேண்டும் என்பதற்காகவே "அந்த ஏட்டுக்குரியவர்கள்'' என்று அல்லாஹ் கூறியிருக்க முடியும். அந்த ஏடு யாருக்குமே கிடைக்காது என்றால் "அந்த ஏடு'' என்று முக்கியத்துவப்படுத்தி இறைவன் கூறியிருக்க முடியாது.
அது என்ன ஏடு? என்பது பல வருடங்களாக உலகத்திற்குத் தெரியவில்லை. ஆனால் அந்த ஏடுகளில் இருந்த செய்திகள் இப்போது அம்பலமாகியுள்ளன.
"சாவுக்கடல் சாசனச் சுருள்கள்'' என்ற தலைப்பில் 1998ஆம் ஆண்டு ஒரு மாதத்தில் பல தடவை பி.பி.சி. தொலைக்காட்சியில் ஒரு மணி நேர நிகழ்ச்சி ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில் சொல்லப்பட்ட செய்திகள் கேட்போர் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாக இருந்தது.

இந்த நிகழ்ச்சியின் முதல் ஒளிபரப்பு 1993ஆம் ஆண்டிலேயே காட்டப்பட்டதாகவும் சொல்லப்பட்டது.
(அந்த வீடியோ பதிவுகள் onlinepj.com இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.)
பார்க்க பி பி சி வீடியோ 
அதன் விபரங்கள்:
1947ஆம் ஆண்டு ஒரு நாள் ஆடு மேய்க்கும் ஓர் அரபுச் சிறுவன், காணாமல் போன தனது ஆட்டுக் குட்டி ஒன்றைத் தேடி சாவுக்கடலை ஒட்டிய ஜோர்டான் நாட்டு மலைப் பகுதிகளில் தேடி அலைந்தான். அந்த மலைப் பகுதி "கும்ரான் மலைப் பகுதி' என்று அழைக்கப்படுகிறது.
ஆட்டுக் குட்டியைத் தேடிய சிறுவன் அங்கிருந்த குகைக்குள் பார்த்த போது, மண் பாண்டங்களில் சுருட்டி நிரப்பி வைக்கப்பட்ட தோல் ஆவணங்களைக் கண்டிருக்கின்றான். அவைகளில் சிலவற்றை எடுத்து வந்து செருப்புத் தொழிலாளியான தன் தந்தையிடம் கொடுக்க, மறுநாள் தந்தையும், மகனும் சேர்ந்து குகைக்குள் இருந்த அனைத்துச் சுருள்களையும் வீட்டுக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.
அந்தப் பழைய தோல்களைத் தமது செருப்புத் தொழிலுக்குப் பயன்படுத்த எண்ணிய அந்தச் சிறுவனின் தந்தை தோல்களில் ஹிப்ரு மொழியில் எழுதப்பட்டிருந்த வார்த்தைகளின் பொருள் புரியாமல், அதை அப்பொழுது ஜோர்டான் மன்னர் ஆட்சியின் கீழிருந்த கிழக்கு ஜெருஸலத்தைச் சேர்ந்த ஒரு பழைய புத்தகக் கடைக்காரரிடம் காண்பித்திருக்கிறார்.
ஓரளவு ஹிப்ரு மொழியறிந்த அந்தக் கடைக்காரர் அந்தச் சுருள்கள் பழங்காலச் செய்திகளைக் கொண்டதாக இருக்க வேண்டும் என்று கருதி, ஒரு சில தீனார்களுக்கு அத்தனை சுருள்களையும் அந்த செருப்புத் தொழிலாளியிடமிருந்து விலைக்கு வாங்கிக் கொண்டார்.
கிறித்தவரான அந்தப் புத்தகக் கடைக்காரர் அந்தச் சுருள்களை அந்நகரில் இருந்த கிறித்தவ ஆலயத்தில் ஒப்படைத்து விட்டார்.
இந்தச் சந்தர்ப்பத்தில் சுருள்கள் கண்டெடுக்கப்பட்ட விஷயம் வெளிப்பட்டது. அதில் உள்ள செய்திகளைத் தெரிந்து கொள்வதற்கு யூதர்களும், முஸ்லிம்களும் ஆர்வம் காட்டினர்.
அப்போது ஜோர்டானை ஆட்சி செய்த மன்னர் ஹுசைன், "அந்தச் சாசனச் சுருள்கள் முஸ்லிம், யூத, கிறித்தவர்கள் அடங்கிய ஒரு குழுவிடம் பொதுவாக ஒப்படைக்கப்பட்டு அவை ஆராயப்பட வேண்டும்'' என்று விண்ணப்பித்தார்.
ஆனால் கிறித்தவப் பாதிரியார்கள், "அது தனியார் சொத்து'' என்று வாதிட்டு அதைப் பொதுவில் வைக்க மறுத்து விட்டனர். கிறித்தவர்களில் பல அறிஞர்களுக்கும் கூட அவற்றைப் படிப்பதற்குச் சந்தர்ப்பம் அளிக்கப்படவில்லை.
இடைப்பட்ட ஐந்தாண்டு காலங்களில் ஜெருஸலத்தில் இருந்த பாதிரிமார்கள் சில குழுக்களை ஏற்படுத்தி கும்ரான் மலைப் பகுதிகளில் இருந்த குகைகளில் தேடியலைந்து அங்கிருந்த சாசனச் சுருள்கள் அனைத்தையும் தங்கள் கைவசம் கொண்டு வந்து விட்டனர்.
1952ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அனைத்துச் சுருள்களும் கிறித்தவப் பாதிரிமார்கள் கையில் போய்ச் சேர்ந்து விட்டன. பதினைந்தாயிரம் கையெழுத்துப் பிரதிகள் இவ்வகையில் இருப்பதாக தற்பொழுது கணக்கிட்டு உள்ளனர்.
கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேல் அந்த சாசனச் சுருள்களில் அடங்கிய செய்திகளை, ஒரு குறிப்பிட்ட கிறித்தவப் பாதிரிகள் அடங்கிய குழு இருட்டடிப்பு செய்து வந்தது.
பல கிறித்தவ அறிஞர்களும், ஆராய்ச்சியாளர்களும் அதைப் படிப்பதற்கு ஆர்வம் கொண்டு கேட்டபோது, அவர்களுக்கு அந்த வாய்ப்பு மறுக்கப்பட்டது.
சாசனச் சுருள்களைக் கைவசம் கொண்ட குழுவில் ஒருவர் இறக்க நேரிட்டால் அவருக்குப் பதில் அக்குழுவில் உள்ள மற்றவர்களால் வேறொரு பாதிரியார் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவருக்கு மட்டுமே அதைப் படிப்பதற்கு உரிமை வழங்கப்பட்டு வந்தது.
இவ்விதமாகவே இவ்வளவு காலமும் அந்தச் சாசனச் சுருள்களின் செய்திகள் இரகசியமாக வைக்கப்பட்டு வந்தன. இந்த இரகசியக் காப்பில் போப்பாண்டவரின் வாட்டிகன் சபை முன்னணியில் இருந்தது.
தோலில் பதிந்த அந்தப் பழங்காலச் சாசனம் அழிந்து விடும் நிலையைக் கண்ட அதன் இரகசியக் காப்பாளர்கள் அச்சாசனங்களை மைக்ரோஃபிலிம்  (நுண்ணிய படச்சுருள்) எடுத்தார்கள்.
அதன் ஒரு செட் போட்டோ காப்பிகள் அமெரிக்காவில் உள்ள லாஸ்ஏஞ்சல்ஸ் நகரிலிருக்கும் ஒரு நூலகத்துக்குப் பாதுகாப்புக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
1990ஆம் ஆண்டு அந்த நூலகத்துக்குத் தலைவராக ஐஸ்மேன் என்ற அறிஞர் நியமிக்கப்பட்டார். அவர் முன்பே அந்த சாசனச் சுருள்களைப் படிப்பதற்கு ஆர்வம் காட்டி, அதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டவர்.
இப்போது தனது அதிகாரத்தில் உள்ள நூலகத்தில் இருந்து சாசனச் சுருள்களின் நுண்ணிய போட்டோக்களைப் பெரிய அளவில் போட்டோ எடுக்கச் செய்து அவற்றைப் படித்தார்.
அவற்றைப் படித்த போது தமக்கு வியப்பு ஏற்பட்டதாக அவர் வாக்குமூலம் அளிக்கின்றார். இத்தனை காலமும் கிறித்தவசபை அந்த சாசனச் சுருள்களை மற்றவர்களுக்குக் காட்டாமல் இருந்ததன் உள்நோக்கம் என்ன என்பதைப் புரிந்து கொண்டதாகவும் கூறுகின்றார்.
மைக்கேல் வைஸ் என்னும் சிகாகோ பல்கலைக் கழக ஹிப்ரு மொழிப் பேராசிரியர் ஒருவரின் உதவியைக் கொண்டு அந்த சாசனச் சுருள்களில் முக்கியமானது என்று அவர் கருதிய 100 கையெழுத்துப் பிரதிகளை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்து வெளியிட்டார்.
அந்தப் புத்தக வெளியீடு கிறித்தவ உலகத்தை உலுக்கியது என்றும், குறிப்பாக கிறித்தவ மத ஆலயங்கள் பேரதிர்ச்சியில் உறைந்து போயின என்றும் அந்த டாக்குமென்டரியின் செய்தியாளர் கூறுகின்றார்.
மேற்கத்திய மக்களின் மதநம்பிக்கையைத் தகர்ப்பதாக அந்தப் புத்தக வெளியீடு இருந்தது என்றும், ஆகவே அந்த இரு அறிஞர்களும் சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்ற அச்சம் இருந்தது என்றும் அதன் செய்தியாளர் குறிப்பிடுகிறார்.
அப்படி எது நடந்தாலும் அதைத் தாங்கள் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும், இதற்கு அஞ்சி ஒரு மிகப்பெரும் பேருண்மையை உலகத்திலிருந்து தாங்கள் மறைக்க விரும்பவில்லை என்றும் அவ்விரு அறிஞர்களும் வெளிப்படையாகக் கூறுவதையும் அந்தத் தொலைக்காட்சி டாக்குமெண்டரி பதிவு செய்து காட்டுகின்றது.
கிறித்தவ மத ஆலயங்களில் இப்போது ஏசுவின் பெயரால் செய்யப்படும் மதச்சடங்குகளும், வழிபாடுகளும் ஆரம்ப கிறித்தவர்களிடையே நடைபெறவில்லை என்பதையே சாசனச் சுருள்கள் நிரூபிக்கின்றன.
இந்தச் சடங்குகளுக்கும், ஏசுவின் பிரச்சாரத்திற்கும், கொள்கை கோட்பாடுகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. அவை அனைத்தும் "பவுல்' என்பவரால் பிற்காலத்தில் ஏற்படுத்தப்பட்டவை.
மொத்தத்தில் இப்போது ஏசுவின் பெயரால் சொல்லப்படும் அனைத்து கிறித்தவக் கொள்கைகளும் பொய்யானவை. அவற்றை ஏசுவிற்கு அடுத்த தலைமுறையில் வாழ்ந்த உண்மையாளர்களின் வாழ்வில் காண முடியவில்லை.
மேற்கண்டவாறு அறிஞர் ஐஸ்மேன் கூறும் போது, ஒரு யூதரிடம் அவற்றைப் பற்றி வாதம் செய்கையில் அது இஸ்லாத்தை உறுதிப்படுத்துகிறது என்று ஆணித்தரமாகக் கூறுகிறார். அவ்விடத்தில் அந்த வாதம் நிறுத்தப்பட்டு மறுகாட்சி காட்டப்படுகின்றது.
இதே முறையில் மைக்கேல் வைஸ் என்ற அறிஞர் பேசும் போதும், அது இஸ்லாத்தை உறுதிப்படுத்துகின்றது என்று கூறுகிறார். இங்கும் காட்சி மாற்றப்படுகின்றது.
ஆகவே இந்தச் சாசனச் சுருள்கள் எந்த வகையில் குர்ஆனையும், இஸ்லாத்தையும் உண்மைப்படுத்துகின்றன என அவர்கள் கூறுகிறார்கள் என்பதைப் பார்வையாளர்கள் அறிய முடியவில்லை.
அந்தச் செய்தியிலிருந்து நாம் ஆச்சரியமான ஓர் உண்மையைத் தெரிந்து கொள்கிறோம்.
ஈஸா (அலை) அவர்களுக்கு இறைவன் இஞ்ஜீல் எனும் வேதத்தை வழங்கியதாகத் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. ஆனால் கிறித்தவ சமுதாயத்திடம் அந்த வேதம் நிச்சயமாக இல்லை எனலாம்.
ஏனெனில் பைபிளின் புதிய ஏற்பாடு என்பது இயேசுவுக்குக் கடவுள் வழங்கியதன்று. மாறாக ஏசுவைப் பற்றி மற்றவர்கள் எழுதிய குறிப்புகள் தான் புதிய ஏற்பாடு.
"ராஜ்ஜியத்தின் சுவிஷேசத்தை இயேசு பிரசங்கித்தார்'' என்று பைபிளில் கூறப்பட்டுள்ளது. (பார்க்க: மத்தேயு 4:23, மாற்கு 1:14)
எந்த இறைவேதத்தை மறைத்தார்களோ அதைத்தான் இயேசுவின் வழி வந்த நல்ல மனிதர்கள் தங்களுடன் எடுத்துச் சென்று குகையில் தங்கினார்கள் என்று முடிவு செய்யப் போதுமான காரணம் இருக்கிறது.
"குர்ஆனை ஒத்திருக்கின்றது'' என்பது தான் அந்தச் சுருள்களைப் படித்த கிறித்தவ அறிஞர்களின் கருத்தாகும்.
இஞ்ஜீல் எனும் வேதத்தைக் திருக்குர்ஆன் மெய்ப்பிப்பதாக திருக்குர்ஆனும் பல இடங்களில் குறிப்பிடுகின்றது.
அதை வாசித்த பாதிரியார்கள் திட்டமிட்டு மறைத்ததும் இந்தக் கருத்தை உறுதிப்படுத்துகின்றது.
மனிதர்களால் எழுதப்பட்ட ஏட்டுக்கு இவ்வளவு முக்கியத்துவம் அளித்து இறைவன் கூறியிருக்க மாட்டான் என்பதும் இக்கருத்தை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

courtesy : OnlinePJ.com