Translate

Tuesday, December 16, 2008

இஸ்லாத்தின் அடிப்படை

அல்லாஹ்வைத்தவிர வேறு வணக்கத்திற்குறிய நாயன் இல்லை. முஹம்மது(ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் அடியாரும் அவனின் திருத்தூதருமாய் இருக்கிறார்கள் என்று நான் சாட்சியம் கூறுகிறேன் என்பதே ஷஹாதாவாகும்


'அஷ்ஷது அல்லாயிலாஹ இல்லல்லாஹு வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரஸுலுஹு'. ஷஹாதத் என்று அழைக்கப்படும் இச்சொற்றொடர்கள் இஸ்லாத்தின் அடிப்படையும் ஆணிவேருமாகும். புதிதாக இஸ்லாத்தைத் தழுவுவோரும், இஸ்லாமியப் பெற்றோர்களுக்கு பிறந்த முஸ்லிம்களும் இந்த ஷஹாதத் எனும் இச்சாட்சியத்தை நாவால் மொழிந்து உள்ளத்தால் உறுதிபூண்டு செயலால் நல்லறம் புரியும்படி கட்டளையிடப் பட்டுள்ளனர்.

படைத்துக் காத்து பரிபாலித்து நாளை மறுiயில் நமக்கு நல்கவிருக்கும் நற்கூலியை நம்பிக்கை கொண்டு ஏக இறைவனாகிய அல்லாஹ்வைத் தவிர வேறு எவருக்கும் என் வணக்க வழிபாடுகளை உறுதியாகச் செய்யமாட்டேன் என்று உறுதி கொள்வதும் அதன் பிரகாரம் தன் சொல்லால் உள்ளத்தால் நடத்தையால், நான் நடந்து காட்டுவேன் என்று கூறுவதும் இச்சாட்சியத்தில் அடங்கும்.

வானில் உள்ள கிரகங்கள். நட்சத்திரங்கள் பூமியில் உள்ள ஜீவராசிகள் மற்றுமுள்ள அனைத்துப் பொருட்களையும் பரிபக்குவமாகப் படைத்து அவற்றுக்கு இயக்கங்களை நிர்மானித்து அவற்றின் வாழ்வாதாரம் இவ்வுலகில் ஜீவித்திருக்கும், மரணக்கும் நாட்களை முறையே வரையரை செய்து நிர்வகிக்கும் சர்வசக்தி பெற்றவனே அல்லாஹ். மூலமின்றி படைத்துப் பரிபாலிக்கும் பூரண சக்தி அவனையன்றி வேறு எவர்க்கும் இல்லை. படைப்பது மட்டுமின்றி அதற்கு ஜீவ, மரணத்தை நிர்ணயிக்கும் முழு உரிமையும் படைத்தவன் அல்லாஹ்வுக்கே உரியது. அதுபோன்றே அவன் வழங்கும் வாழ்வாதாரமும் நாடியோர்க்கு தாராளமாகவும் நாடியோருக்குச் சுருக்கியும் வழங்குகிறான், மறைவான ஞானமும் அவனுக்கேயுரியது. ஆக படைப்பாளன் என்று நம்பும் ஒவ்வொரு முஸ்லீமும் வல்லலோனின் இத்துணை அம்சங்களையும் சேர்த்து நம்பிக்கைக் கொள்ள வேண்டும்.

இஸ்லாமல்லாத பிற மதத்தினர் செலுத்தும் வணக்க வழிபாடுகளாகிய சிலை வணக்கம், சூரிய சந்திரனை வழிபாடு செய்தல், ஈஸா (அலை), உஜைர்(அலை) போன்ற இறைத்தூதர்களை இறைவனின் மகனாகச் சித்தரிப்பது வணக்க வழிபாடுகள் புரிவது நெருப்பினை வணங்குவது போன்ற வணக்க வழிபாடுகளிலிருந்தும் இஸ்லாம் வேறுபட்டு தனியாக நிற்கிறது. இதுபோன்ற வணக்கவழிபாடுகள் புரிந்த வௌ;வேறு சமுதாய மக்களை நேர்வழிப்படுத்த நிறைய இறைத்தூதர்கள் இப்பூவுலகுக்கு இறைவனால் அனுப்பப்பட்டுள்ளனர். இறைத்தூதர்களின் போதனையை ஏற்றோர் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து மீட்சியும் புறக்கணித்தோர் பூண்டோடு அழிக்கப்பட்டு மடிந்ததையும் அருள் மறையின் வசனங்கள் உறுதிப் படுத்துகின்றன. அல்லாஹ்வும் அவன் திருத்தூதரும் நமக்கு ஏவியவற்றைப் பின்பற்றி, தடுத்தவற்றிலிருந்து முற்றிலும் தவிர்ந்து கொள்ள வேண்டியதை அருள் மறை அழகு படக் கூறுவதைக் கேளுங்கள்.(நம்) தூதர் உங்களுக்கு எதைக் கொடுக்கின்றாரோ அதை எடுத்துக் கொள்ளுங்கள் இன்னும், எதை விட்டும் உங்களை விலக்குகின்றாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள் மேலும், அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் வேதனை செய்வதில் மிகக் கடினமானவன். (59:7)பெயர் மற்றும் தன்மைகளில் படைத்தோன் அல்லாஹ்வுக்குப் பல திரு நாமங்கள் உள்ளன. அவனின் அத்தன்மைகளை உருவகம் கொடுக்காமல் எவ்வாறு கூறப்பட்டுள்ளதோ அவ்வாறே நம்புவதும் ஷஹாதத்தின் அம்சமாகும். அல்லாஹ் அருள்மறையில் குறிப்பிடுகிறான்:அர்ரஹ்மான் அர்ஷின் மீது அமைந்தான்.(20:5)அவன் அர்ஷில் அமர்ந்திருப்பதை நம்பும் ஒரு விசுவாசி, அவன் இப்படி அமர்ந்தான், அப்படி அமர்ந்தான் என உருவகிக்காமல் உள்ளத்தால் நம்புவதே இதன் அம்சம்.வானங்களையும், பூமியையும் படைத்தவன் அவனே உங்களுக்காக உங்களில் இருந்தே ஜோடிகளையும் கால் நடைகளிலிருந்து ஜோடிகளையும் படைத்து, அதைக் கொண்டு உங்களை(ப் பல இடங்களிலும்) பல்கி பரவச் செய்கிறான், அவனைப் போன்று எப்பொருளும் இல்லை அவன் தான் (யாவற்றையும்) செவியேற்பவன், பார்ப்பவன். (42:11)இவ்வாறு அல்லாஹ் தனது சர்வ வல்லமையைப் பிரகடனப் படுத்துகிறான். ஆகவே அல்லாஹ்வின் தன்மைகளை நம்பும் ஒரு விசுவாசி இவ்வசனத்தையும் சேர்த்து நம்பவேண்டும்.முஹம்மது(ஸல்) அவர்கள் பற்றி குறிப்பிடுகையில்(நபியே!) நீர் கூறும் ''நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால், என்னைப் பின் பற்றுங்கள் அல்லாஹ் உங்களை நேசிப்பான் உங்கள் பாவங்களை உங்களுக்காக மன்னிப்பான் மேலும், அல்லாஹ் மன்னிப்பவனாகவும், மிக்க கருணை உடையவனாகவும் இருக்கின்றான்.(3:31)நபி(ஸல்) அவர்களின் வாழ்வு குறித்து அன்னை ஆயிஷா(ரலி) அவர்களிடம் நபித் தோழர்கள் வினவிய போது, அண்ணலாரின் வாழ்வு குர்ஆனாக இருந்தது என்ற செய்தியை ஹதீஸ்களில் காண்கிறோம். மேலும் அண்ணலாரின் வாழ்வில் நமக்கு அழகிய முன்மாதிரி உள்ளதை வல்ல அல்லாஹ் அருள்மறையில்அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (33:21)

ஆக அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் திருத்தூதரையும் நம்புவதில் இத்தனை அம்சங்களையும் இணைத்தே ஒரு விசுவாசி நம்பிக்கைக் கொள்ளுதல் வேண்டும். இதுவே ஷஹாதாவின் விளக்கமாகும்.இஸ்லாமிய அடிப்படைக் கல்விஅடிப்படைகள் மூன்று: 1) ஈமான் 2) இஸ்லாம் 3) இஹ்ஸான்1. ஈமான் என்றால் நம்பிக்கை, ஈமான் கொண்டவன் முஃமின் எனப்படுகிறான்.2. இஸ்லாம் என்றால் கட்டுப்படுதல், முஸ்லிம் என்றால் கட்டுப்படுபவன்.3. இஹ்ஸான் என்றால் அல்லாஹ்வை (நேரில்)காண்பது போல் வணங்குவது.ஈமானின் அடிப்படைகள் ஆறுபுண்ணியம் என்பது உங்கள் முகங்களைக் கிழக்கிலோ, மேற்கிலோ திருப்பிக்கொள்வதில் இல்லை. ஆனால் புண்ணியம் என்பது அல்லாஹ்வின் மீதும், இறுதி(த் தீர்ப்பு) நாளின் மீதும், மலக்குகளின் மீதும், வேதத்தின் மீதும், நபிமார்கள் மீதும் ஈமான் கொள்ளுதல்...(2:177)(இறை) தூதர் தம் இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பெற்றதை நம்புகிறார்; (அவ்வாறே) முஃமின்களும் (நம்புகின்றனர் இவர்கள்) யாவரும் அல்லாஹ்வையும், அவனுடைய மலக்குகளையும், அவனுடைய வேதங்களையும், அவனுடைய தூதர்களையும் நம்புகிறார்கள்...(2:285)1. அல்லாஹ்வை நம்புவது2. வானவர்களை நம்புவது3. வேதங்களை நம்புவது4. நபிமார்களை நம்புவது5. மறுமையை நம்புவது6. விதியை நம்புவது (நன்மை, தீமைகள் அனைத்தும் அல்லாஹ் நிர்ணயித்தபடியே நடக்கிறது என்று நம்புவது ...(உமர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸின் கருத்து - புகாரி)இஸ்லாம் கூறும் உள்ளமும் உடலும்அகீதா (கொள்கை (ஈமான்))அமல் (செயல் (இஸ்லாம்))அஹ்லாக் (ஒழுக்கம் (நற்குணம்))ஈமானுக்கும், இஸ்லாத்திற்கும் இடையே உள்ளவேறுபாடுஈமான் உள்ளத்தோடு தொடர்புடையது, அதன் அம்சங்களை வெளிப்படையாக அறியமுடியாது எனினும் அதன் பிரதிபலிப்பை உணர முடியும்.இஸ்லாம் உடலோடும் செயல்களோடும் தொடர்புடையவை, செயலை வைத்து வெளிப்படையாக அறிந்து கொள்ளலாம்.ஈமான் உள்ளத்துடன் தொடர்புடையது இஸ்லாம் கூறும் கடமை உடலுடன் தொடர்புடையது. ஆக மனதால் கொள்கையை ஏற்று நாவால் மொழிந்து உடலால் செயல்படுபவன் முஸ்லிம் ஆவான்.முஃமினின் காரியம் ஆச்சரியமானது! அவனது காரியங்கள் அனைத்தும் அவனுக்கு நலவாகும். அது முஃமினைத் தவிர வேறு யாருக்கும் இல்லை. அவனுக்கு மகிழ்ச்சியளிக்கக்கூடியது வந்தால் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்துகிறான். அது அவனுக்கு நலவாகி விட்டது. அவனுக்கு துன்பமளிக்கக்கூடியது வந்தால் பொறுமைக் கொள்கிறான். அது அவனுக்கு நலவாகி விட்டது. - முஸ்லிம்: அபூயஹ்யா சுஹைப் பின் ஸினான்(ரலி).செயல்கள் நிய்யத் என்னும் உறுதியான எண்ணங்களைப் பொறுத்தவையாகும். ஒவ்வொரு மனிதருக்கும் அவர் உறுதியாக எண்ணியது உள்ளது. எவர் ஹிஜ்ரதை அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் செய்கிறாரோ அது அவ்வாறே ஆகிவிடுகிறது. எவராவது ஹிஜ்ரத் உலகிற்காகவோ, அல்லது மணமுடிக்க விரும்பும் பெண்ணிற்காகவோ செய்கிறாரோ அந்த ஹிஜ்ரத் அவர் எதற்காக செய்தாரோ அதற்காகவே இருக்கும். - புகாரி, முஸ்லிம்: உமர்(ரலி).நிச்சயமாக அல்லாஹ் உங்கள் உடலின் பக்கமோ தோற்றத்தின் பக்கமோ பார்க்கமாட்டான். எனினும் உங்களின் இதயத்தின் பக்கமும், செயல்களின் பக்கமும் பார்க்கிறான். புகாரி, முஸ்லிம்: அபூஹூரைரா(ரலி).ஈமான் எழுபதுக்கும் மேற்ப்பட்ட கிளைகளால் ஆனது. அதில் மிகச் சிறந்தது லாயிலாஹ இல்லல்லாஹூ என்ற திருக்கலிமாவாகும். அக்கிளைகளில் மிகக் குறைந்தது பாதையை விட்டும் துன்பம் தரும் பொருட்களை அகற்றுவதாகும். வெட்கமும் ஈமானின் ஒரு கிளையாகும். புகாரி, முஸ்லிம்: அபுஹூரைரா(ரலி).ஈமானின் சுவையைப் பெற்றவர்மூன்று விஷயங்கள் யாரிடம் உள்ளதோ அவர் ஈமானின் சுவையைப் பெற்றுவிட்டார்.1. மற்ற அனைத்தையும் விட அல்லாஹ்வும் அவன் தூதரும் அவருக்கு மிகப் பிரியமானவர்களாக இருப்பது.2. அவர் யாரை நேசித்தாலும் அல்லாஹ்வுக்காக நேசிப்பார்3. இறைநிராகரிப்பை விட்டு அல்லாஹ் அவரை ஈடேற்றம் செய்த பின் மீண்டும் அந்த இறைநிராகரிப்பின் பக்கம் திரும்புவதை தம்மை நரக நெருப்பில் வீசப்படுவதை வெறுப்பதைப் போல வெறுக்கவேண்டும். புகாரி, முஸ்லிம் : அனஸ்(ரலி)முஃமின்களில் அழகிய குணமுடையவரே அவர்களில் ஈமானில் பரிபூரணமானவர் ஆவார். உங்களில் சிறந்தவர் உங்கள் பெண்களிடம் சிறந்தவரே ஆவார். திர்மிதி : அபூஹூரைரா(ரலி).ஈமான் கூடும், குறையும்நல்ல அமல்களைச் செய்யும் போது ஈமான் அதிகரிக்கும், நல்லவற்றைச் செய்யாமல் விட்டுவிட்டாலோ அல்லது தீயவற்றைச் செய்தாலோ ஈமான் குறையும்.சில பாவங்களை செய்தால் ஈமான் முழுமையாகவே மனிதனைவிட்டு வெளியேறிவிடும் (உதாரணமாக திருட்டு, விபச்சாரம்).ஒருவன் முஃமினாக இருக்கும் நிலையில் விபச்சாரம் செய்ய மாட்டான். ஒருவன் திருடும் போது முஃமினாக இருக்கமாட்டான். திர்மிதி : அபூஹுரைரா(ரலி)உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும் அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (பின்னும்) அதிகரிக்கும் இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள். (8:2)

Tuesday, October 21, 2008

வாழ்த்துக்களில் சிறந்தது - அஸ்ஸலாமு அலைக்கும்

மனிதர்களின் உரையாடலுக்கும், ஒருவரை ஒருவர் விளங்கிக்கொள்ளும் புரிந்துணர்விற்கும் மொழி ஒரு பாலமாக இருக்கிறது. ஒரு விஷயத்தைப் பேசுகையில் வார்த்தைகளும் அதனை அமைக்கும் சொற்றொடர்களும் மிக முக்கியமானவை.

இஸ்லாம் ஒரு சக சகோதரரை சந்திக்க/உரையாட நேர்ந்தால் "அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹூ" என்று கூறுங்கள் என்று அறிவுறுத்துகிறது. இதற்கு "தங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டுமாக!" என்கிற அழகான பொருள் பொதிந்திருக்கும் வாழ்த்தைக் காணலாம். 

இதுவே அல்லாஹ்வின் தூதர் முஹம்மது(ஸல்) அவர்களுடைய போதனையாகவும், மனிதகுலத்திற்குரிய மிகச் சிறந்த முன்மாதிரியாகவும் இருந்தது. மேலும் அளவற்ற அருளாளன் அல்லாஹ்வே முஸ்லிம்களுக்கு ஏவியுள்ள நல்வழியாகிய வாழ்த்து முறையும் "அஸ்ஸலாமு அலைக்கும்" என்பது தான். 


அல்லாஹ் குர்ஆனில், கீழ்க்கண்டவாறு கூறுகிறான்:

"மேலும் உங்களிடம் என்னுடைய வசனங்களை(அத்தாட்சிகளை, தெளிவான ஆதாரங்களை) நம்பக்கூடியவர்கள் வரும்போது (அவர்களுக்கு) நீங்கள் கூறுங்கள், "ஸலாமுன் அலைக்கும்"(உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும்)". (அல் அன் ஆம் 6 : 54 )
இப்னு அல் கைய்யிம்(ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:
"அர்ரஹ்மான் எனும் சர்வ வல்லமையுடையவன் மிகவும் தூய்மையான, சாந்தியானவன். அவன் முஸ்லிம்க(ளாகிய இஸ்லாமியர்க)ளுக்கு "அஸ்ஸலாமு அலைக்கும் " என்பது வாழ்த்தாக இருக்க வேண்டும் என்று விதித்துள்ளான். 
இது இவ்வுலகில் உள்ள அனைத்து நாட்டினர் தற்போது கடைபிடித்து வரும் வாழ்த்து முறைகள், வழிமுறை செயல்களாகிய உண்மைக்கு புறம்பான வாழ்த்துக்களையும் விட சிறந்த ஒன்றாகும். "ஆயிரம் ஆண்டுகள் வாழ (வேண்டும் என்று) வாழ்த்துகிறேன்" என்பதோ "குட்மார்னிங் - காலை வணக்கம்" என்பதோ அல்லது ஒருவர் மற்றவருக்கு சிரம் பணிவதோ, அப்பொருளுடைய வார்த்தைகள் கூறிக் கொள்வதோ சரியான ஒன்றாகாது.
இவ்வாறே இந்த 'அஸ்ஸலாமு அலைக்கும்' எனும் வாழ்த்து எல்லாவற்றையும் விட சிறந்த ஒன்றாக உள்ளது. ஏனென்றால் இதன் பொருள் பாதுகாப்பு , அமைதி (சாந்தி - நிம்மதி) போன்றவை ஆகும். இவைகளே வாழ்க்கை சுபிட்சத்திற்கு அவசியமானவை. மேலும் இவையின்றி வேறு எதையும் அடைவது இயலாதது.
''அஸ்ஸலாமு அலைக்கும்'' என்பது வாழ்த்தோடு மட்டுமின்றி மிகச் சிறந்த பிரார்த்தனை ஆகும். எப்படி?

'ஸலாம்' எனும் வார்த்தை 'ஸலெம' எனும் மூல வார்த்தையிலிருந்து வருகிறது. இதற்கு, தீய மற்றும் கேடானவற்றை விட்டு ஒருவர் தன்னை வேறுபடுத்திக் கொள்வது என்று பொருள் வரும். ஆக,நாம் ஒருவரை மற்றொருவர் வாழ்த்தும் போது, "உனக்கு எவ்வித தீங்குகளும் என்புறத்திலிருந்து வராது; உனக்கு எந்த கேடானதும் வரக்கூடாது; உனக்கு எந்த தீங்கும் ஏற்படக்கூடாது;" என்ற பிரார்த்தனையாக இது மாறுகிறது. 

மேலும் 'அஸ்-ஸலாம்' என்பது அளவற்ற அருளாளனாகிய எல்லாம் வல்ல 'அல்லாஹ்' வின் அழகிய பெயர்களில் ஒன்றாக இருப்பதால், இந்த ஸலாம் எனும் வாழ்த்து "அவனுடைய பெயரில் உங்கள் மீது அருள் இறங்கட்டும்; உங்களோடு அல்லாஹ் இருக்கட்டும்; உங்களை அல்லாஹ் நல்வழி நடத்தி பாதுகாக்கட்டும்" என்றும் பொருள் வரும். 

ஆனால் இதில் மிகவும் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் நாம் இவ்வளவு அழகான அர்த்தம் பொதிந்துள்ள ஒன்றை விட்டு விட்டு அதற்கு பகரமாக ''குட் மார்னிங்" அல்லது "ஹாய்" போன்ற அலங்காரமான கருத்தற்ற வாழ்த்துக்களை கூறிக் கொள்வதை தற்பொழுது பழக்கமாக்கிக் கொண்டோம்

நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில், நபித்தோழர்களாகிய ஸஹாபா(பெரும)க்களோ யார் ஸலாம் சொல்வதில் முந்திக்கொள்வது என்று போட்டி போட்டுக் கொண்டு ஒருவர் மற்றவருக்கு ஸலாம் கூறி வந்தனர். இன்னும் சிலர் அறிந்தவருக்கும், அறியாதவருக்கும் ஸலாம் கூறி(வாழ்த்தி)க் கொள்வதற்காகவே பொது இடங்களுக்குச் சென்றனர்.

அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: " இருவர் சந்தித்துக் கொள்ளும் போது யார் முதலில் ஸலாம் சொல்லி (பேச) ஆரம்பிக்கிறாரோ அவரே உங்களில் சிறந்தவராவார்". அறிவிப்பாளர்: இமாம் அந் நவவி அவர்கள்

இவ்வாழ்த்தின் நற்பலன்கள்

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் சில நபித்தோழர்களுடன் அமர்ந்திருந்த இடத்தை கடந்த ஒரு மனிதர் அவர்களுடன் அமரும் போது, "அஸ்ஸலாமு அலைக்கும்" என்று கூறினார்.(அப்பொழுது) நபி(ஸல்) அவர்கள், (அவர் பெற்று கொள்வது உறுதி) ''பத்து ஹஸனாத் ''(பத்து நன்மைகள்) என்று கூறினார்கள். அடுத்தொருவர் வந்தார். அவர், "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹ்'' (உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் உண்டாகட்டும்) என்று கூறி அமர்ந்தார். நபி(ஸல்), அவர்கள் கூறினார்கள்:(அவர் பெற்று கொள்வது உறுதி) ' இருபது ஹஸனாத்'(இருபது நன்மைகள்). மூன்றாவதாக ஒருவர் வந்தார். அவர், "அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்தஹு"(உங்கள் மீது அல்லாஹ்வின் சாந்தியும் கருணையும் அருளும் உண்டாகட்டும்) என்று கூறிவிட்டு அமர்ந்தார். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: (அவர் பெற்று கொள்வது உறுதி) ' முப்பது ஹஸனாத்'(முப்பது நன்மைகள்).

அஸ்ஸலாமு அலைக்கும் என்பது ஈமானி(இறை நம்பிக்கையி)ன் அம்சம் ஆகும்

ஒரு நாள் ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களிடம், "இஸ்லாத்தில் எந்த அம்சம் மிகச் சிறந்தது" என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: "பசித்தவருக்கு உணவளித்தலும், அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் ஸலாம் கூறுவதும்" (ஹதீஸ் நூல்கள்: புகாரி, முஸ்லிம்)

நன்பர்களே எழுதுங்கள் !!!

நன்பர்களே எழுதுங்கள் !!!
இப்போது, நம் இளைய சமுதாயத்தினர், எழுத்து பணியில் காணமுடிகிறது , 
இது நல்ல தொடக்கம்,
இஸ்லாத்தை பற்றி விமர்சனம்(அவதூறு ) எழுகிறதா... 
கோபம் கொள்ளவேண்டாம், 

நீங்கள் மட்டும் யோக்கியமா என்பது போன்ற கோணத்தில் பதில் செல்லாமல் ,
நிதானமாக, அவர்களுக்கு இஸ்லாத்தில் இருந்து பதில் கொடுங்கள்.... 
அவர்களின் செயல் முற்றிலும் தவறு என்பதை தோலுரித்து கட்டுங்கள்.


நீங்கள் என்ன சொன்னாலும் அவர்கள் திருந்திவிடவா போகிறார்கள் என்று யாரோ கேட்பது புரிகிறது....

விமர்சனங்களுக்கு பதில் அளிப்பது ஒரு வகையில் தாவா தான்..
அப்படி நீங்கள் அளிக்கும் பதில் அந்த கேள்வி கேட்டவரின் மனது ஏற்றுக்கொள்ள மாட்டார் என்பது தானே உங்கள் மனதில் தோன்றும் கேள்வி ?

அவர் மனது இப்போது ஏற்றுகொள்ளது, 
அனால் கவனிக்கவேண்டிய விஷயம் ... 

அவர்மனதில் அவரின் விமர்சனத்துக்கான விடையை அவர் மனதில் பதிவு செய்துவிட்டோம், 

நமக்காகவும் அவர் சார்ந்த சமுதயதுக்காகவும் ஏற்றுகொள்ள மறுக்கிறார் அவ்வளவே !

அனால், மீண்டும் இதே தவறை [விமர்சனம்(அவதூறு )] அவர் செய்ய நினைக்கும் பொது அவர் சற்று தயங்குவார், இது நிச்சயம் .


அதுமட்டுமல்லாது ,இப்படிப்பட்ட எழுத்து மூலம் கொடுக்கும் பதிலை, 

நேரடியாக விவாதம் செய்பவர்களின் எண்ணிக்கையை விட ,வெறும் பார்வையாளர்கலாக இருந்து படித்துவிட்டு செல்பவர்களின் , எண்ணிக்கை பத்து மடங்கு அதிகம் .

ஆகையால் , எழுத பழகுங்கள். 
உங்களின் எழுத்து, பதில் அனைத்தும் இஸ்லாத்தின் பார்வையில் அமைத்துகொள்வது அவசியம் .

இந்த எழுத்து தாவா ! மென்மேலும் பெருக, நமது இளைய சமுதாயம் , முன்வரவேண்டும் .

எல்லாம் வல்ல அந்த ஏக அல்லாஹுவின் , கூலி கிடைக்க கைகோர்ப்போமாக!



சொல்லாலும், செயலாலும் அழகிய முஸ்லிம் இவரே!

அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மதுல்லாஹி வபறகாதுஹு!

சொல்லாலும், செயலாலும் அழகிய முஸ்லிம் இவரே! 

நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்) சகோதரர்களே! ஆகவே, உங்கள் இரு சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள். இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள். 49:10

முஃமின்களே! ஒரு சமூகத்தார் பிறிதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்) அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம். 49:11

முஃமின்களே! (சந்தேகமான) பல எண்ணங்களிலிருந்து விலகிக் கொள்ளுங்கள். ஏனெனில் நிச்சயமாக எண்ணங்களில் சில பாவங்களாக இருக்கும். (பிறர் குறைகளை) நீங்கள் துருவித் துருவி ஆராய்ந்து கொண்டிராதீர்கள். அன்றியும், உங்களில் சிலர் சிலரைப்பற்றிப் புறம் பேச வேண்டாம். 49:12

நன்மையைக் கொண்டே தீமையைத் தடுத்துக் கொள்வார்கள். 13:22

இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். 23:3