Translate

Monday, July 13, 2015

எனதருமை இஸ்லாமிய சொந்தங்களுக்கு ஓர் வேண்டுகோள்

எனதருமை இஸ்லாமிய சொந்தங்களுக்கு ஓர் வேண்டுகோள் :----

மக்களை நன்மையின் பக்கம் அழைபதர்காக எதை செய்தாலும் சரிதான் என்ற நோக்கில் தான் அந்த பெரியார் அப்படி செய்தார் இந்த பெரியார் இப்படி செய்தார் என கதைகளை எழுதி வைத்தனர்... அனால் அவை மனிதன் வார்த்தைகள் என்பதால் முன்னுக்குபின் முரணாகி அல்லாஹ்வை மட்டும் தான் வணங்கவேண்டும் என்பது உடைந்து பெரியார்களை வணங்கலாம் என்றுமாரி தர்ஹாக்களுமாக அவுளியாக்களுமாக சுற்றித்திரிகிறது...

மக்கள் தொழவேண்டும் என்பதற்காக அந்த பெரியார் அவ்வளவு நேரம் தொழுதார் இப்படியெல்லாம் தொழுதார் என கதைகள் சொல்ல ஆரம்பம் செய்ததுதான் ...

அந்த பெரியார்களை அவுளியாக்களுமாக ஆக்கி பின் கடவுளாகவும் சித்தரிக்க செய்து பெரும் பாவத்தை மக்களை செய்ய வைத்தது... எனவே ஒருவர் நன்மைசெய்யவேண்டும் என நீங்கள் யாரேனும் நினைத்தால் முஹம்மது (ஸல்) அவர்கள் கூறிய உண்மைகளை (ஹதீஸ்) மட்டும் கூறி இஸ்லாத்தின் பக்கம் அழையுங்கள்...தேவையற்ற கட்டுகதைகளை அல்லாஹ்வின் பெயராலும் இஸ்லாத்தின் பெயராலும் முஹம்மது (ஸல்) அவர்கள் பெயராலும் இட்டுகட்டாதீர்கள்...

நீங்கள் உண்மையாகவே முஹம்மது (ஸல் ) அவர்களை நேசிப்பதாக இருந்தால் அவர்களின் தெளிவான போதனைகளை மட்டும் மற்றவருக்கு எடுத்து சொல்லுங்கள்...ஏனென்றால் முஹம்மது (ஸல்) அவர்கள்தான் கடைசி தூதர் ,அவர்களுக்கு பின் வந்த இமாம்களோ பெரியார்களோ அல்ல (சஹாபாக்கள் கூட இல்லை),  எனவே நாம் பின்பற்ற வேண்டியது நமது இறுதி தூதர் நபிகள் நாயகம் சல்லாஹு வலைவசல்லாம் அவர்கனின் அவர்கள் கூறிய உண்மைகளை (ஹதீஸ்) மட்டும் தான்.

No comments: