Translate

Friday, June 12, 2009

இஸ்லாத்தில் பொதுவாக தடுக்கப்பட்டவைகள்

 • அநியாயமாக ஓர் உயிரைக் கொல்வது.
 • சிசுக்களைக் கொல்வது.
 • தற்கொலை செய்வது.
 • விபசாரம் செய்வது.
 • ஓரின சேர்க்கை புரிவது.
 • சுய இன்பம் அடைவது.
 • மது அருந்துவது, அதை தயார் செய்வது, அதை விற்பது, எடுத்துச் செல்வது.
 • திருடுவது.
 • பெற்றோருக்கு மாறு செய்வது, அவர்களை அதட்டுவது, மிரட்டுவது, சீ என்று அவர்களை சொல்வது.
 • போரில் புறமுதுகுக் காட்டி ஓடுவது.
 • முஃமின்களுக்கு நோவினை செய்வது, அவர்கள் செய்யாத குற்றத்தை அவர்கள் மீது சுமத்துவது, அவர்களைக் குறை கூறுவது.
 • அல்லாஹ்வுக்கு அதிருப்தியளித்து மக்களை மகிழ்விப்பது.
 • ஒப்பந்தங்களை உறுதி செய்தபின் அவைகளை முறிப்பது.
 • பெற்றோரை மாற்றிக் கூறுவது.
 • நெருப்பால் தண்டிப்பது, உயிர் உள்ள வைகளை, இறந்தவைகளை நெருப்பிட்டுக் கொளுத்துவது.
 • இறந்தவர்களின் உடல் உறுப்புகளை வெட்டுவது, சிதைப்பது.
 • பாவமான, தவறான, அநியாயமான காரியங்களில் பிறருக்கு உதவுவது.
 • முஸ்லிம்களுக்கு எதிராக ஆயுதம் ஏந்துவது.
 • முஸ்லிம்களுக்கு கெடுதல் விளைவிப்பது, அதற்கு சூழ்ச்சி செய்வது.
 • மார்க்கக் கல்வி ஞானமின்றி தீர்ப்பளிப்பது.
 • அல்லாஹ்வுக்கு பிடிக்காதவற்றில் பிறருக்கு கீழ்படிவது. (அவர் யாராக இருப்பினும் சரியே!)
 • பொய் சத்தியம் செய்வது.
 • வீணாக சத்தியம் செய்வது.
 • ஒழுக்கமான பெண்களை பழி சுமத்தியவர்கள் தவ்பா செய்து திருந்தவில்லையெனில் அவர்களது சாட்சியை ஏற்றுக் கொள்வது.
 • அல்லாஹ் அனுமதித்தவைகளை ஹராம் என்று விலக்கிக் கொள்வது.
 • ஷைத்தானின் வழிகளை பின்பற்றுவது.
 • அனுமதியின்றி பிறர் பேசிக் கொண்டிருப்பதை கேட்பது.
 • அனுமதியின்றி பிறர் வீட்டில் நுழைவது.
 • தனக்கு சொந்தமல்லாததை தனக்கு சொந்தமானது என்று கூறுவது
 • தான் அனுபவிக்காததை அனுபவித்த தாகக் கூறுவது, தன்னிடம் இல்லாததை இருப்பதாகக் கூறுவது.
 • செய்யாத ஒன்றைக் கூறி புகழ் தேடுவது.
 • இறை கோபத்திற்கும் தண்டனைக்கும் ஆளானவர்களின் ஊர்களுக்குள் செல்வது. (ஆனால் படிப்பினை பெரும் நோக்கத்துடன் அல்லது அழுதவர்களாக அவ்வூர்களுக்குச் செல்வது கூடும்.)
 • பாவமான விஷயத்தில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வது.
 • பிறர் குறைகளை ஆராய்வது.
 • நல்ல ஆண், பெண்கள் மீது கெட்ட எண்ணம் கொள்வது.
 • பொறாமை கொள்வது.
 • குரோதம் கொள்வது.
 • உறவுகளை, சமுதாயத்தை புறக்கணித்து வாழ்வது.
 • அசத்திய வழியில் செல்வது.
 • பெருமை, பகட்டு, தற்பெருமை, அகந்தை, அகம்பாவம், மமதை கொள்வது.
 • உலக வஸ்துக்களைக் கொண்டு மகிழ்ச்சி அடைவது.
 • பூமியில் பெருமையாக நடந்து செல்வது.
 • மக்களை விட்டும் முகத்தை திருப்பிக் கொள்வது. (அதாவது மக்களிடம் பழகுவதை தவிர்ப்பது பெருமையின் அடையாளமாகும்.)
 • கொடுத்த தர்மத்தை திரும்பப் பெருவது. (தர்மம் கொடுத்த பொருளை விலைக்குக் கூட திரும்ப வாங்கக் கூடாது.)
 • தந்தை தனது மகனைக் கொலை செய்துவிட்டால் அவரைக் கொல்வது.
 • பிறரின் மர்மஸ்தானத்தைப் பார்ப்பது. (இந்த சட்டத்தில் ஆண், பெண் இருபாலாரும் சமமானவர்களே.)
 • பிறரின் தொடையை பார்ப்பது. (அவர் இறந்தவராயினும் சரியே!)
 • சங்கைமிகு (ரஜப், துல் கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) மாதங்களின் கண்ணியத்தை பாழ்படுத்துவது.
 • கெட்ட வழியில் சம்பாதித்து நல்ல வழியில் செலவு செய்வது.
 • தொழிலாளியிடம் வேலை வாங்கிக் கொண்டு கூலி கொடுக்காமல் இருப்பது.
 • பிள்ளைகளுக்கு சமத்துவமின்றி அன்பளிப்பு வழங்குவது.
 • வஸிய்யத் செய்வதில் தவறிழைப்பது.
 • வாரிசுக்கு வஸீய்யத் செய்வது.
 • முழு சொத்தை வஸீய்யத் செய்வது. (அப்படி வஸிய்யத் செய்தாலும் மூன்றில் ஒன்றுதான் செல்லுபடியாகும்.)
 • அண்டை வீட்டாருடன் தவறாக நடந்து கொள்வது.
 • அண்டை வீட்டாருக்கு நோவினை செய்வது, தொந்தரவு தருவது.
 • மார்க்கக் காரணமின்றி மூன்று நாள்களுக்கு மேல் ஒரு முஸ்லிமுடன் பேசாமல் இருப்பது.
 • கற்களை சுண்டி எறிந்து விளையாடுவது. (இதன் மூலம் பிறருக்கு தீங்கு ஏற்படலாம். மேலும் கண், பற்களில் பட்டு காயம் ஏற்படலாம்.)
 • பிறர் மீது அத்துமீறுவது. (ஏசுவது, சண்டையிடுவது, உரிமையைப் பறிப்பது.)
 • போட்டிக்காக ஒருவர் மற்றவரைவிட சப்தமிட்டுக் குர்ஆன் ஓதுவது.
 • இருவர் பேசிக் கொண்டிருக்கும்போது அனுமதியின்றி குறுக்கிடுவது. அனுமதியின்றி அவர்களைப் பிரிந்து செல்வது.
 • ஒருவர் அமர்ந்திருக்கும்போது அவரை எழுப்பிவிட்டு அந்த இடத்தில் அமர்வது.
 • ஒருவருடன் இருக்கும்போது அவர் அனுமதியின்றி எழுந்துச் செல்வது.
 • அமர்ந்திருப்பவருடைய தலைக்குப் பின்னால் நிற்பது.
 • பாதி வெயிலிலும் பாதி நிழலிலும் உட்காருவது. (ஏனெனில் இது ஷைத்தானின் முறையாகும்.)
 • மக்களுக்கு துன்பம் விளைவிப்பது.
 • மக்கள் மீது வாளை ஒங்குவது.
 • இரும்புப் பொருள்களைக் கொண்டு ஒருவரை சுட்டிக் காட்டுவது.
 • வாள், கத்தி போன்றவைகளை உறுவிய நிலையில் எடுத்துச் செல்வது.
 • மார்க்கத்தில் தடையில்லாமல் இருக்கும் போது அன்பளிப்பைத் தவிர்ப்பது.
 • தேவையான இடங்களில் தேவைக்கு அதிகமாக செலவு செய்வது.
 • தேவையில்லாத இடங்களில் செலவு செய்வது.
 • விருந்தாளிக்காக சிரமமெடுத்து பகட்டாக விருந்து செய்வது.
 • புத்தி சுவாதீனமானவர்களிடம் அவர்களது பொருளை ஒப்படைப்பது.
 • ஆண், பெண்களில் அல்லாஹ் சிலருக்கு கொடுத்திருக்கும் சிறப்பைப் பார்த்து மற்றவர்கள் ஆசைப்படுவது.
 • தர்கித்துக் கொள்வது, சண்டையிட்டுக் கொள்வது, வீண் விவாதங்கள் செய்வது.
 • விபசாரிகளை தண்டிக்கும்போது கருணை காட்டுவது.
 • தர்மம் செய்தபின் அதை சொல்லிக் காண்பிப்பது.
 • தர்மம் வாங்கியவரை துன்புறுத்துவது.
 • தெரிந்த சாட்சியத்தை மறைப்பது.
 • அநாதைகளை அடக்குவது.
 • யாசிப்பவர்களை விரட்டுவது.
 • அசுத்தமானது, ஹராமானது ஆகியவைகளை மருந்துக்கு உபயோகிப்பது. (அல்லாஹ் இந்த சமுதாயத்திற்கு அசுத்தமான, ஹராமான பொருளில் நோய் நிவாரணத்தை வைக்க வில்லை)
 • போரில் பெண்களை, குழந்தைகளை கொல்வது.
 • தேவையற்ற சிரமம் எடுப்பது.
 • ஒரு மார்க்க அறிஞரிடம் அவரை குழப்பத்திலும் சந்தேகத்திலும் ஆழ்த்தும் விஷயங்களை கேட்பது. அல்லது தனது நுண்ணறிவையும் திறமையையும் வெளிப் படுத்துவதற்காக நடக்காத கற்பனையான விஷயங்களைப் பற்றி கேட்பது.
 • எவ்வித பயனுமற்ற வீண் விவாதங்களில் ஈடுபடுவது.
 • செஸ், தாயம் மற்றும் இதுபோன்ற விளையாட்டுகள் பணத்திற்காக விளையாடுவது.
 • கால்நடைகளை சபிப்பது.
 • சோதனை காலத்தில் முகத்தில் அறைந்து கொள்வது, கீறிக் கொள்வது.
 • குடிமக்களுக்கு மோசடி செய்வது.
 • உலக விஷயத்தில் தன்னை விட தாழ்ந்த நிலையில் உள்ளவரைப் பார்க்காமல் உயர்ந்த நிலையில் உள்ளவரைப் பார்ப்பது. (இது அல்லாஹ் தனக்கு கொடுத்த அருளை உயர்வாகக் கருதாமல் தாழ்வாக கருதுவதற்கு வழி வகுக்கும்.)
 • பெருமை பேசுவது.
 • வாக்குக்கு மாறு செய்வது.
 • அமானிதத்திற்கு மோசடி செய்வது.
 • கற்ற கல்வியை மறைப்பது.
 • தவறான விஷயத்தில் பரிந்துரை செய்வது.
 • தேவையின்றி பிறரிடம் யாசகம் கேட்பது.
 • பிரயாணத்தின் போது மணி ஓசை எழுப்புவது. (அதாவது வாகனத்தில் மணி கட்டுவது.)
 • நாய்களை வீட்டினுள் வளர்ப்பது. (கால்நடைகள், விவசாயம், தோட்டங்கள் முதலியவற்றின் பாதுகாப்பிற்காக அல்லது வேட்டைக்காக வளர்க்கலாம்.)
 • ஒழுக்கம் கற்பிக்க கண்டிக்கும்போது அதிகபட்சம் பத்து அடிக்குமேல் அடிப்பது.
 • அதிகமாக சிரிப்பது.
 • நோயாளிகளை உண்பதற்கும், பருகு வதற்கும் நிர்பந்திப்பது. (ஏனெனில் அல்லாஹ் அவர்களுக்கு உணவளிக்கிறான், நீர் புகட்டுகிறான்.)
 • குஷ்டரோகிகளை உற்றுப் பார்ப்பது.
 • ஒரு முஸ்லிம் மற்ற முஸ்லிமை பயமுறுத்துவது.
 • தான் கொடுத்த அன்பளிப்புகளையோ, வெகுமதிகளையோ திரும்பப் பெறுவது. (ஆனால் தந்தை பிள்ளைக்குக் கொடுத்த வைகளை திரும்பப் பெறலாம்.)
 • இடது கையால் கொடுப்பது, வாங்குவது.
 • நிபந்தனையிட்டு நேர்ச்சை செய்வது. (இதனால் அல்லாஹ்வின் விதியை மாற்ற முடியாது. இவ்வாறு கஞ்சன்தான் செய்வான்.)
 • வைத்திய ஞானமின்றி வைத்தியம் பார்ப்பது.
 • எறும்பு, தேனீ, மரங்கொத்தி பறவை ({ஹத் {ஹத்) இவைகளைக் கொல்வது.
 • தனது சுவரில் பலகை ஒன்றை நட்டுக் கொள்ள அண்டை வீட்டாரைத் தடுப்பது.
 • கையால் சைகை செய்து ஸலாம் சொல்வது.
 • தெரிந்தவர்களுக்கு மட்டும் ஸலாம் சொல்வது. (தெரிந்தவர்கள், தெரியாதவர்கள் எல்லோருக்கும் ஸலாம் சொல்ல வேண்டும்.)
 • ஸலாம் சொல்லாமல் பேசியவருக்கு பதில் சொல்வது.
 • ஒரு ஆண் மற்றொரு ஆணை, ஒரு பெண் மற்றொரு பெண்ணை இச்சையுடன் முத்தமிடுவது.
 • கோபமாக இருக்கும்போது தீர்ப்பளிப்பது.
 • அடுத்தவரின் வாதத்தை கேட்காமல் ஒருவரின் வாதத்தை மட்டும் கேட்டுவிட்டு தீர்ப்பளிப்பது.
 • சூரியன் மறையும் (மஃரிப்) நேரத்தில் பிள்ளைகளை வீட்டிலிருந்து வெளியில் அழைத்துச் செல்வது. (முழுமையாக இருட்டிய பின் வேண்டுமானால் அழைத்துச் செல்லலாம். ஏனெனில், அது ஷைத்தான்கள் பரவும் நேரமாகும்.).
 • இரவில் பழங்களை மரத்திலிருந்து பறிப்பது.
 • இரவில் அறுவடை செய்வது. (இவ்வாறு செய்வதால் ஏழை, எளியோருக்கு அது தெரியாமல் ஆகிவிடலாம். அறுவடை அன்றே அதில் கடமையான தர்மத்தை கொடுத்துவிட வேண்டுமென்று அல்லாஹ் கூறியிருப்பதால் ஏழைகளை தவிர்ப்பதற்காக இவ்வாறு சூழ்ச்சி செய்வது கூடாது.)
 • கடைத் தெருவில் நடந்து செல்லும்போது மற்றவர்களுக்கு இடையூறு தரும்படியான, காயப்படுத்தும்படியான பொருள்களை எடுத்துச் செல்வது.
 • காலரா பரவியிருக்கும் ஊரிலிருந்து வெளியேறுவது, அந்த ஊருக்குச் செல்வது.
 • வெள்ளி, சனி, ஞாயிறு, புதன் ஆகிய கிழமைகளில் இரத்தம் குத்தி எடுப்பது. (வியாழன், திங்கள், செவ்வாய் ஆகிய தினங்களில் எடுக்கலாம்.)
 • தும்மியதற்குப்பின் அல்லாஹ்வை புகழாதவருக்கு (அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லாதவருக்கு) யர்ஹமுக்கல்லாஹ் சொல்வது.
 • கஅபாவின் திசையில் எச்சில் துப்புவது.
 • இரவில் பயணம் செய்யும்போது பாதையின் ஓரங்களில் ஓய்வெடுப்பது.
 • காற்று பிரியும் சத்தத்தைக் கேட்டு சிரிப்பது (இது எல்லோருக்கும் ஏற்படும் இயற்கையாகும். அவ்வாறு சிரிப்பதால் பிறருக்கு சங்கடம் ஏற்படலாம்.)
 • நறுமணம், தலையணை, துளசி ஆகியவற்றை ஏற்றுக்கொள்ள மறுப்பது.

No comments: